சென்னை: எம்புரான் படத்தின் இயக்குனரும், நடிகருமான பிருத்விராஜூக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.
பிருத்வி ராஜ் இயக்கத்தில், உருவான படம் லூசிபர். இதில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிகப் பெரிய வெற்றியையும், வசூலையும் இப்படம் பெற்றது. இதையடுத்து தற்போது லூசிபர் படத்தின் 2ம் பாகத்தை, எம்புரான் என்ற பெயரில் எடுத்துள்ளார். இதில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டாகியுள்ளது. 2 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது.
அதே நேரத்தில் சர்ச்சையிலும் சிக்கியது. இப்படத்தில் 2002ம் ஆண்டு குஜராத்தில் வெடித்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் குறித்த காட்சி இடம் பெற்றுள்ளது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மோகன்லால் மன்னிப்பு கேட்க, சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட சில காட்சிகளும் நீக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனரும் நடிகருமான பிருத்விராஜூக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோல்ட், ஜன கன மன, கடுவா ஆகிய 3 திரைப்படங்களில் பிருத்விராஜ் இணை தயாரிப்பாளராக இருந்த நிலையில், ரூ.40 கோடி வரை சம்பளம் பெற்றார் என செய்திகள் வெளியாகின. இதையடுத்து கோல்ட், ஜன கன மன, கடுவா ஆகிய 3 படங்களின் வருமானம் தொடர்பான கணக்கு விவரங்களை சமர்ப்பிக்குமாறு வருமானவரித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது. அந்த நோட்டீசில் வரும் ஏப்., 29ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மறுபக்கம் எம்புரான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரைடு நடத்தி கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}