கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி.. பின் விடுவித்த வருமான வரித்துறை.. அதிர்ச்சியில் காங்கிரஸ்!

Feb 16, 2024,05:46 PM IST

டெல்லி:  காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மேக்கான் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது வங்கிக் கணக்குகள் செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தேர்தல் பத்திரங்கள் குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


முன்னதாக கட்சியின் பொருளாளர் அஜய் மேக்கான் கூறுகையில், இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.  வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வருமான வரிக் கணக்கு கட்டத் தாமதானதாக கூறி ரூ.210 கோடி அபராதம் விதித்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்




இது ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரிடி. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை. கட்சியின் தேர்தல் தயார் நிலையை சீர்குலைக்கும் நடவடிக்கை. இந்தியாவில் ஜனநாயகம் செத்துப் போய் விட்டது. ஒரு கட்சி ஆட்சி முறை நடப்பது போன்ற சூழல் உருவாகியுள்ளது. நீதித்துறையிடமும், மக்களிடமும், ஊடகங்களிடமும் நாங்கள் நீதி கேட்கிறோம் என்று கூறியிருந்தார் மேக்கான்.


கணக்கை முடக்கி வைத்ததற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது.  மேலும் வருமான வரித்துறை குறை தீர்ப்பு ஆயத்திடமும் இந்த விவகாரத்தை காங்கிரஸ் கொண்டு சென்றது.  அதைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டுள்ளன.


மொத்தம் நான்கு வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியிருப்பதாக கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் காசோலைகளை ஏற்க வேண்டாம் என்றும் வங்கிககளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த வங்கிக் கணக்குகள் வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளன.


கடந்த 2018-2019ம் ஆண்டில் வருமான வரிக் கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதேசமயம், 45 நாள் தாமதத்திற்காக  நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்குவது ஜனநாயக விரோதமானது, மிகத் தீவிரமானது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுபோன்ற கடுமையான நடவடிக்கை இதற்கு முன்பு எடுக்கப்பட்டதில்லை என்றும் அஜய் மேக்கான் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

திருவள்ளூருக்கு ஆரஞ்சு...சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

news

மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்

news

திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்