பெங்களூரு: பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை வெறும் 46 ரன்களுக்கு இழந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தியா நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை எடுத்தது. ஆனால் இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய கேப்டன் ரோஹித் சர்மாவும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ரன் எடுக்கவே திணறும் நிலை ஏற்பட்டது. இதில் ரோஹித் சர்மா 2 ரன்களை எடுத்த நிலையில் டிம் செளத்தி பந்தில் போல்ட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த விராத் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி மேலும் அதிர்ச்சியைக் கூட்டினார். தொடர்ந்து சர்பிராஸ் கானும் டக் அவுட் ஆக இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜெய்ஸ்வால் 13 ரன்கள் எடுத்த நிலையில் மறுபக்கம் ரிஷாப் பந்த் 20 ரன்களை சேர்த்தார். இதுதான் இந்திய வீரர்களில் தனிப்பட்ட முறையில் எடுத்த அதிகபட்ச ரன்கள். மற்ற அனைவரும் சிங்கிள் டிஜிட்டைத் தாண்டவில்லை.
கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் டக் அவுட் ஆனார்கள். ரவிச்சந்திரன் அஸ்வின் இதுபோன்ற நேரங்களில் கை கொடுப்பார். அவரும் இன்று டக் ஆனதால் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. மொத்தம் 5 பேர் இன்று முட்டை வாங்கியதால் இந்திய அணிக்கு மிகப் பெரிய அவமானமாக போய் விட்டது. இறுதியில் 31.2 ஓவர்களிலேயே இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார். மறுபக்கம் வில்லியம் ஓ ரூர்க்கி 4 விக்கெட்களை வீழ்த்தினார். டிம் செளத்திக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. மாட் ஹென்றி வெறும் 15 ரன்களை விட்டுமே விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல 6 ஓவர்களை வீசிய டிம் செளத்தி 8 ரன்களை மட்டுமே விட்டுத் தந்தார்.
இந்திய டெஸ்ட்கிரிக்கெட் வரலாற்றில், சொந்த ஊரில் நடந்த டெஸ்ட் போட்டியில் இவ்வளவு குறைந்த ரன்களைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். 91 வருட கால டெஸ்ட் வரலாற்றிலும் இதுவே முதல் முறையாகும். இந்திய பேட்டிங் ஆர்டர் இப்படி சீட்டுக்கட்டு போல சரிந்துத ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று முதல் ஆக., 3ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள Z பிரிவு y பிரிவு ... மறைமுகமாக தவெகவை தாக்கிய சீமான்!
ஆபரேஷன் மகாதேவ் அதிரடி.. காஷ்மீரில் ராணுவ வேட்டையில்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
திமுக அரசு குற்றம் நடைபெறாமல் தடுப்பதில்லை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதுமில்லை: அண்ணாமலை
BCCI.. மாத்துறோம்.. மொத்தமா மாத்துறோம்.. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு.. பிசிசிஐ முடிவு!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
60 வயதிலும் 20 வயது இளைஞர் போல இருக்கணுமா.. அப்படீன்னா இதை பாலோ பண்ணுங்க!
துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தா படத்தின் டீசர் வெளியீடு!
{{comments.comment}}