டில்லி : லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தின் படி பாஜக., 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 233 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.
மொத்தமுள்ள 543 லோக்சபா உறுப்பினர் பதவியில் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 272 இடங்கள் பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும். அப்படி பார்த்தால் பாஜக கூட்டணி ஏற்கனவே பெரும்பான்மை அளவை கடந்து விட்டது. இதனால் மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஆனால் இந்த 293 என்ற எண்ணில், பாஜகவின் பங்கு என்று பார்த்தால் 239 இடங்கள் மட்டுமே. மற்ற அனைத்தும் கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி தான். அதாவது பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அது தனிப் பெரும் கட்சியாக மட்டுமே உருவெடுத்துள்ளது.
மற்றொரு புறம் இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெறுவதற்கு அந்தக் கூட்டணிக்கு, இன்னும் 40 இடங்கள் மட்டுமே தேவை. தற்போது இருந்து வரும் முன்னிலை நிலவரங்களின் நிலைமை பெரிய அளவில் மாறினாலோ அல்லது கூட்டணி கட்சிகள் சிலவற்றை இந்தியா கூட்டணி தங்கள் வசம் இழுத்தாலோ மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது சிக்கலாகி விடும். ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு சென்று விடும்.
இதனால் பாஜக தலைமை என்ன நடக்குமோ என்ன கலக்கத்தில் உள்ளது. குறிப்பாக சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் ஆகியோர் வெளியேறினால் சிக்கலாகி விடும். ஏற்கனவே பாஜக.,விற்கு பல மாநிலங்களில் கிடைத்துள்ள பின்னடைவின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் யாரும் தெளியாத நிலையில் தலைக்கு மேல் இப்படி ஒரு கத்தி வந்து கொண்டிருக்கிறதே என்ற கலக்கமும் தற்போது தொற்றிக் கொண்டுள்ளது.
இதனால் இது பற்றி அவசரமாக கூடி ஆலோசிக்க காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஒரு பக்கமும், பாஜக கூட்டணி கட்சிகள் ஒரு பக்கமும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}