துபாய்: சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ளது. துபாயில் இன்று நடந்த அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை அட்டகாசமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
அரை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். ஆனால் இந்தியப் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவின் திட்டத்தை தவிடு பொடியாக்கினர். ஆரம்பத்திலிருந்தே சூப்பராக நல்ல இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்தன.
டிராவிஸ் ஹெட் 39, ஸ்டீவ் ஸ்மித் 73, மார்னஸ் லபுசான் 29, அலெக்ஸ் கேரி 71, பென் த்வர்சியுஸ் 19 என ரன்கள் எடுத்தனர். இவர்களைத் தவிர மற்றவர்கள் சொதப்பினர். இந்தியத் தரப்பில் முகம்மது ஷமி அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்தார். வருண் சக்கவர்த்தி, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்களையும், ஹர்டிக் பாண்ட்யா, அக்ஸார் படேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களிலேயே 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 265 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி சூப்பராக சேஸ் செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா 28 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் சொதப்பினார். ஆனால் விராட் கோலிதான் மிரட்டி விட்டார். அட்டகாசமாக ஆடிய அவர் அதிரடியாக 84 ரன்களைக் குவித்து இந்தியாவின் சேஸிங்கை இலகுவாக்கினார்.
மறுபக்கம் அதிரடி வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் 45, கே.எல்.ராகுல் 42 என குவிக்க அக்ஸார் படேல் தன் பங்குக்கு 27 சேர்த்துக் கொடுத்தார். கடைசி நேரத்தில் ஹர்டிக் பாண்ட்யா வான வேடிக்கையில் குதித்தார். 24 பந்துகளைச் சந்தித்த அவர் 28 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இறுதியில் இந்திய அணி 6 விக்கெட்களை மட்டும் இழந்து, 267 ரன்களை எடுத்து வாகை சூடியது. 48.1 ஓவர்களிலேயே இந்த வெற்றி இலக்கை இந்தியா எட்டியது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் , ஆடம் ஜம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், த்வார்சியுஸ் , கூப்பர் கனோலி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்
இந்தியா புதிய சாதனை

இந்த வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இந்தியா இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளதால், பைனல்ஸ், துபாயிலேயே நடைபெறும்.
தொடர்ச்சியாக 3வது முறையாக இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இது ஒரு புதிய சாதனையாகும். 2013, 2017ஆகிய தொடர்களில் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியிருந்தது. அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபி நடைபெறவில்லை. தற்போது 2025 தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று ஹாட்ரிக் சாதனையைப் படைத்துள்ளது.
2013 தொடரில் இந்தியா சாம்பியன் ஆனது. 2017ல் பாகிஸ்தானிடம் தோற்றது. தற்போது மீன்டும் பட்டம் வெல்லும் வாய்ப்பை நெருங்கியுள்ளது இந்தியா.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}