பாகிஸ்தான், வங்கதேசத்தை விட.. இந்தியாவில் பெண் எம்.பிக்களின் விகிதம் .. கம்மி!

Sep 19, 2023,04:18 PM IST

டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது மிகப் பெரிய கனவாகவே இருந்து வருகிறது. தற்போது அது நனவாகும் சூழல் எழுந்துள்ளது.


பெண்களுக்கு முக்கிய அதிகார மையங்களில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்து வருகிறது. இப்போதுதான் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்து பெண்கள் அசத்திக் கொண்டுள்ளனர். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தைக் கொண்டு வந்து பெண்களுக்கு உயர்வு அளித்ததற்காக மறைந்த பிரதமர் ராஜீவ் காந்திக்குத்தான் பெண்கள் நன்றியைச் சொல்ல வேண்டும்.


அதேபோல நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தைக் கொண்டு  வர காங்கிரஸ் முயற்சித்தது. முதலில் ராஜ்யசபாவில் இந்த சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் பல்வேறு வட மாநிலக் கட்சிகளின் கடும் எதிர்ப்பால் இந்த சட்டம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்படவே இல்லை.


திமுக, அதிமுக  உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய கட்சிகள் இந்த சட்டத்தை ஆதரித்தன. ஆனால் ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட பல்வேறு வட மாநில கட்சிகள் இதை எதிர்த்தன.  இதனால்தான் இந்த சட்டம் கனவாகவே நீடித்து வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது இந்த சட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இம்முறை இச்சட்டம் கண்டிப்பாக நிறைவேறும் என்று தெரிகிறது.


இதற்கிடையே, இந்திய நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள பெண் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் நமது அண்டை நாடுகளை விட மிகவும் குறைவாக இருக்கிறது. சர்வதேச அளவில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் நாடுகள் வரிசையில் 185 நாடுகளில் 141வது இடத்தில் இருக்கிறது இந்தியா.


அதாவது இந்திய நாடாளுமன்றத்தில் பெண்ளின் விகிதாச்சாரம் 15 சதவீதமாக உள்ளது. சர்வதேச சராசரி இதில் 26 சதவீதமாகும்.  பாகிஸ்தானில் பெண் எம்.பிக்களின் விகிதாச்சாரம் 20 சதவீதமாக உள்ளது. இங்கு நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 17 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. வங்கதேசத்தில் 21 சதவீத அளவுக்கு பெண் எம்.பிக்கள் உள்ளனர். நேபாளம் இதை விட சிறப்பான நிலையில் இருக்கிறது. அங்கு 30 சதவீத அளவுக்கு பெண் எம்.பிக்கள் உள்ளனர்.


அமெரிக்காவில் 29, இங்கிலாந்தில் 35 சதவீத அளவுக்கு பெண் உறுப்பினர்கள் உள்ளனர். பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்காத நாடுகள் வரிசையில்  இலங்கை (5%), கத்தார் (4%), ஓமன் (2%), குவைத் (3%) ஆகியவை உள்ளன.


நியூசிலாந்து , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றில் பெண்களுக்கு 50 சதவீத அளவுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில்தான் உலகிலேயே அதிகபட்சமாக 61 சதவீத பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அதாவது அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பெண்கள்தான் அதிகம்.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?

news

வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

news

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது

அதிகம் பார்க்கும் செய்திகள்