ஒலிம்பிக்ஸ் 2028 கிரிக்கெட்: இந்தியா, அமெரிக்கா IN.. பாகிஸ்தான் OUT.. வெஸ்ட் இண்டீஸ் DOUBT!

Aug 01, 2025,07:30 PM IST

நியூயார்க்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸ் நகரில் 2028ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாட்டும் இடம் பெறவுள்ளது. ஆனால் இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் அணிகளை தேர்வு செய்யும் தகுதிச் சுற்றை பிராந்திய அளவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்துவதால் பல முக்கிய அணிகளுக்கு இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.


2028ம் ஆண்டு ஜூலை 14 முதல் 29 வரை லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்தத் தொடரில் கிரிக்கெட்டும் இடம் பெறுகிறது. இதனால் ஆர்வம் பெருகியுள்ளது. இருப்பினும் இதற்கான தகுதிச் சுற்று எப்படி இருக்கும் என்று ஐசிசி செய்துள்ள முடிவு பல கிரிக்கெட் அணிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 


அதாவது ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் அணிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை வரவுள்ளது. இதன் மூலம், ஆறு அணிகள் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெறும். இந்த அணிகளை ஐசிசி தரவரிசைப்படி தேர்வு செய்யவுள்ளனர். அதாவது ஆசியா கண்டத்தில் உள்ள கிரிக்கெட் அணிகளில் எது தரவரிசையில் டாப்பில் இருக்கிறதோ அந்த அணி ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியும். அந்த வகையில் பார்த்தால் இந்தியாதான் தற்போது டாப்பில் உள்ளது. எனவே இந்தியா ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறும்.




பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளால் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது. இது அந்த நாட்டு ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல ஓசியானியா பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் உள்ளன. அதில் ஆஸ்திரேலியா டாப்பில் இருக்கிறது. இதனால் நியூசிலாந்துக்கு வாய்ப்பில்லை. 


கிரிக்கெட் போட்டியானது 1900க்குப் பிறகு ஒலிம்பிக்கில் மீண்டும் இடம்பெறுகிறது. சிங்கப்பூரில் நடந்த ICC AGM கூட்டத்தில் இது பற்றி பேசப்பட்டது. ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் ஒரு அணி தேர்ந்தெடுக்கப்படலாம் என்று யோசனை சொல்லப்பட்டது. இருப்பினும் இன்னும் நிறைய விஷயங்கள் முடிவு செய்யப்பட வேண்டியுள்ளது. பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த மண்டல வாரியான தகுதி சுற்றுக்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். சிலர் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளனர். 


அணிகளின் தரவரிசையைப் வைத்துத் தேர்ந்தெடுக்கலாம் என்ற பழைய முறையை ICC இப்போது கைவிட்டுள்ளது. ஏனென்றால், இது உலக அளவில் எல்லா நாடுகளுக்கும் வாய்ப்பு அளிக்காது என்று பல நாடுகள் நினைத்தன. எனவே, ஒலிம்பிக்கின் நோக்கமான அதிகமான நாடுகள் பங்கேற்பதை உறுதி செய்ய, இந்த புதிய முறை கொண்டுவரப்படுகிறது. இதனால் இந்தியா vs பாகிஸ்தான் போன்ற முக்கியமான போட்டிகள் ஒலிம்பிக்கில் வாய்ப்பில்லை. 


ICC T20 தரவரிசையின்படி பார்த்தால், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவர் அணியிலும் இந்தியா ஆசியாவிலிருந்தும், ஆஸ்திரேலியா ஓசியானியாவிலிருந்தும், இங்கிலாந்து ஐரோப்பாவிலிருந்தும், அமெரிக்கா, அமெரிக்காவிலிருந்தும், தென்னாப்பிரிக்கா ஆப்பிரிக்காவிலிருந்தும் தகுதி பெறும். அமெரிக்கா போட்டியை நடத்துவதால், நேரடியாகத் தகுதி பெறும். ஆனால், அமெரிக்க பெண்கள் அணி தரவரிசையில் முதல் 20 இடங்களில் இல்லை. மேலும், அமெரிக்க கிரிக்கெட் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் அந்நாட்டு குடிமக்கள் இல்லை என்ற பிரச்சினையும் உள்ளது. இது குறித்து அக்டோபர் மாதம் நடக்கும் ICC கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். 


இந்தப் புதிய குழப்பத்திலிருந்து தப்பவும், அதிக அளவிலான வீரர்களை ஒலிம்பிக்கில் விளையாட வைக்கவும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம், ஸ்காட்லாந்து கிரிக்கெட் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் ஆகியவற்றுடன் இணைந்து கிரேட் பிரிட்டன் கிரிக்கெட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து வீரர்கள் கிரேட் பிரிட்டனுக்காக விளையாட முடியும்.


மேற்கு இந்தியத் தீவுகளைப் பொறுத்தவரை அந்த அணி அமெரிக்கக் கண்டத்தில்தான் வருகிறது. அமெரிக்க கிரிக்கெட் அணி தானாகவே ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி பங்கேற்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தகுதி அடிப்படையில் பார்த்தால் மேற்கு இந்தியத் தீவுகள் அணிதான் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியும். ஆனால் போட்டியை அமெரிக்கா நடத்துவதால் அதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வார்கள் என்று தெரியவில்லை.


லாஸ் ஏஞ்செலஸ் நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போமோனா பகுதியில் அமைந்துள்ள பேர்கிரவுன்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில்தான் ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.  900 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கிற்குப் பிறகு இப்போதுதான் கிரிக்கெட் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

71வது தேசிய திரைப்பட விருதுகள்.. ஷாருக் கான் சிறந்த நடிகர்.. எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகர்!

news

10 ஆண்டுகளில் முதல் முறையாக... சென்னை மெட்ரோ ரயிலில்... ஜூலை மாதத்தில் 1 கோடி பேர் பயணம்!

news

சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட கவினின் உடல்... நேரில் அஞ்சலி செலுத்த வந்த அரசியல் தலைவர்கள்!

news

எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதத்தால்.. ஓபிஎஸ்ஸை இழக்கும் பாஜக.. ஆட்டம் காணுகிறதா கூட்டணி?

news

6 மாவட்டங்களில் இன்றும்... 8 மாவட்டங்களில் நாளையும்... கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம்!

news

கோச்சுக்காதீங்க.. சமாதான முயற்சியில் பாஜக...முடிவில் உறுதியாக இருக்கும் ஓபிஎஸ்.. அடுத்தது என்ன?

news

முதல்வரை சந்திக்க நான் நேரம் கேட்டேனா.. யார் சொன்னது?.. டாக்டர் ராமதாஸ் மறுப்பு

news

பாஜக.,வுடன் கூட்டணியா?.. வாய்ப்பில்ல ராஜா.. வாய்ப்பே இல்லை.. வைகோ பளிச் பதில்!

news

எடப்பாடி பழனிச்சாமி மனு தள்ளுபடி.. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்தா?

அதிகம் பார்க்கும் செய்திகள்