சென்னை: இனி இந்திய வரலாறு தமிழ் மண்ணிலிருந்தே எழுதப்படும் என்பதில் ஒவ்வொரு தமிழரும் பெருமைகொள்ளும் உணர்ச்சிமிகு தருணமிது என்று எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரும்பின் தொன்மை என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து காணொளி மூலமாக கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கும், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் அறிமுகமாகி விட்டது. அககழ்வா்ய்வு மூலம் அண்மையில் கிடைக்கப் பெற்ற கதிரியக்க காலக் கணக்கீடுகள், இரும்பின் காலத்தை கிமு 4000க்கு முன்பு கொண்டு சென்று விட்டது. தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகமாகியிருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம் என்று தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, எம்.பி., கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில்,
இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகந்தோறும்
வெள்ளி அன்ன விளங்கினர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந்தாது உதிர
(நற்றினை 249:1-4)
இரும்பின் வலிமையை ஒத்தது புன்னைமரம் என்கிறது எட்டுத்தொகையில் முதல்நூலான நற்றினை. உலக வரலாற்றிலும், நாகரிகங்களில் வளர்ச்சியிலும் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது இரும்பின் பயன்பாடு, நமது இலக்கியங்கள் எடுத்தியம்புவது போல், தமிழ் நிலத்திலிருந்தே இரும்பின் காலம் தொடங்கியதாகவும் புதிய ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக உலகிற்கு வழங்கியுள்ள முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி இந்திய வரலாறு தமிழ் மண்ணிலிருந்தே எழுதப்படும் என்பதில் ஒவ்வொரு தமிழரும் பெருமைகொள்ளும் உணர்ச்சிமிகு தருணமிது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
{{comments.comment}}