இந்தியா 46.. ஒட்டுமொத்தமா பாத்தா.. இது அவ்ளோ சீசீ இல்லை.. உள்ளூரில்தான் பெருத்த அவமானம்!

Oct 17, 2024,02:49 PM IST

பெங்களூரு:  நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா எடுத்துள்ள 46 ரன்கள் என்பது உள்ளூரில் பெருத்த அவமானமானகரமான ஸ்கோராக மாறியுள்ளது. அதேசமயம், ஒட்டுமொத்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா எடுத்த மிகவும் குறைந்த ஸ்கோர் என்ற பெருமை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குவித்த 36 ரன்கள்தான்.. அந்த ரெக்கார்டை இந்தியா பிரேக் பண்ணலை!!!


பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி பெருத்த சோகத்தை ஏற்படுத்தி விட்டது நம்முடைய ரசிகர்களுக்கு. முதல் இன்னிங்ஸை இந்தியா வெறும் 46 ரன்களில் இழந்த விதம் அனைவரையும் அதிர வைத்து விட்டது. 5 வீரர்கள் முட்டை போட்டு ஹார்ட் பீட்டை எகிற வைத்து விட்டனர். அதில் விராத் கோலியும் ஒருவர் என்பது கூடுதல் துயரமாகும்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்களும் சேர்ந்து தற்போது சோகமாகியுள்ளனர். பெங்களூரு அணியின் கேப்டன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன், சொந்த மண்.. இப்படி எல்லாம் இருந்தும் விராத் கோலி இப்படி சொதப்பியதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இன்று பட்டையைக் கிளப்புவார், செஞ்சுரி அடிப்பார் என்று நம்பியிருந்தனர் ரசிகர்கள். ஆனால் அது நடக்காமல் போய் விட்டது.




இதற்கிடையே, இந்தியாவின் ஒட்டுமொத்த டெஸ்ட் வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்கோர் என்றால் அது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2020ம் ஆண்டு எடுத்த 36 ரன்கள்தான். அதுதான் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் எடுத்த மிகக் குறைந்த ஸ்கோராகும். அடுத்த இடம் இங்கிலாந்துக்கு எதிராக  1974ல் எடுத்த 42 ரன்கள் உள்ளது. நாடு சுதந்திரம் வாங்கிய பின்னர் 1947ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் போட்டியில் எடுத்த 58 ரன்கள் 3வது இடத்தில் உள்ளது. 


உள்ளூர் மைதானத்தில் மிகவும் குறைந்த ஸ்கோர் என்ற பெயர் 1987ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக எடுத்த 75 ரன்கள் என்ற ஸ்கோர் இருந்தது. தற்போது அதை இன்று எடுத்த 46 ரன்கள் முறியடித்து முதலிடத்தைப் பிடித்து நெஞ்சில் நெருப்பள்ளிப் போட்டு விட்டது. இன்று எடுத்த ஸ்கோரானது, இந்தியாவின் 3வது மிகக் குறைந்த டெஸ்ட் ரன் என்ற கெட்ட பெயரையும் எடுத்து விட்டது.


பந்து வீச்சாளர்களே ஏதாவது பண்ணுங்க.. இந்திய ரசிகர்களின் புண்பட்ட மனதுக்கு ஸ்பின் பவுலர்கள் ஏதாவது செய்து ஆறுதல் தருவார்களா.. பார்க்கலாம்!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?.. பரபரக்கும் பாமக!

news

பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி

news

125 சீட்.. திமுக கூட்டணியில் குண்டைப் போட்ட காங்கிரஸ் தலைவர்.. திமுக.,விலும் ஆரம்பமானது கலகம்

news

சட்டசபைத் தேர்தல் வேலையில் மும்முரம் காட்டும் பிரதான கட்சிகள்.. குழப்பத்தில் கூட்டணி கட்சிகள்

news

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய்யை விமர்சித்த சீமான்!

news

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

ஆடு, மாடு மாநாட்டை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும் : சீமான்!

news

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!

news

திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்