சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித் திரிந்த மாடு முட்டி படுகாயமடைந்த முதியவர் சுந்தரம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சாலைகளில் முன்பெல்லாம் மாடுகளின் நடமாட்டம் சுத்தமாக இல்லாமல் இருந்தது. அதேபோல நாய்களின் நடமாட்டமும் பெரிதாக இருக்காது. ஆனால் சமீப காலமாக மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதுவும் கிடுகிடுவென அதிகரித்துக் காணப்படுகிறது.
இதனால் பல்வேறு விபரீதங்கள் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ளன. மாடுகள் திடீரென மிரண்டு ஓடுவதாலும், முட்டுவதாலும், துரத்துவதாலும் சாலையில் தெருக்களில் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மாடுகளை தெழுவத்தில் கட்டி வைக்காமல் தெருவில் விடுவது. வீட்டில் வளர்க்கும் நாய்களையும் தெருக்களில் சுற்றித்திரிய விடுவது போன்றவற்றால் அபாயம் அதிகம் இருப்பதை உணராமல் சிலர் கால்நடைகளை தெருக்களில் விடுகின்றனர்.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அரசு என்ன கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாலும் கால் நடை வளர்ப்பாளர்கள் அவற்றை பொருட்படுத்துவதே கிடையாது. சமீபத்தில் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் மாலை பள்ளி முடிந்து தாயுடன் சென்ற சிறுமியை மாடு முட்டியது. அதை தொடர்ந்து திருவல்லிக்கேணி பகுதியில் சுந்தரம் என்ற முதியவரை மாடு தூக்கிப் போட்டு காயப்படுத்தியது. தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 18 ஆம் தேதி ஐஸ்ஹவுஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சுந்தரத்தை, அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு மாடு திடீரென முட்டி கீழே தள்ளியது. இதில் சுந்தரம் பலத்த காயமடைந்தார். சுந்தரத்தை உடனடியாக மீட்ட அப்பகுதி மக்கள், அவரை ஓமந்தூர் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுந்தரத்தை முட்டிய மாடு, கோயில் மாடு என்று தகவல் வெளியானது. ஆனால் அந்த மாடு கோயிலுக்கு சொந்தமானது அல்ல என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாடுகளால் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடப்பதால் மக்கள் அச்சத்தில் முழ்கியுள்ளனர். அக்டோபர் 19ம் தேதி சென்னை மாநகராட்சி சார்பில் தெருவில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் விரட்டி விரட்டி பிடித்தது அனைவரும் அறிந்ததே. இவ்வாறாக மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுத்தாலும், மாடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு தான் இன்றளவும் உள்ளது.
இதற்கு தீர்வு தான் என்ன..?
Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
{{comments.comment}}