இடைநிலை ஆசிரியர் தேர்வு.. நாளை முதல் விண்ணப்பம்.. மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்!

Feb 13, 2024,06:00 PM IST
சென்னை: இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு, நாளை முதல்  மார்ச் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

கல்வித்துறையில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.பிப்ரவரி 14 முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





2023-2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலி பணியிடங்கள் 1768 இடைநிலை ஆசிரியர் நேரடியாக நியமனம் செய்யப்படுகின்றனர். பிப்ரவரி 14-ஆம் தேதி நாளை முதல் மார்ச் 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடக்கும். தேர்வு எழுதுபவர்கள் தமிழ் தகுதி கட்டாயமாக்கப்படும் என்றும் 50 மதிப்பெண் கொண்ட 30 கேள்விகளுக்கு 30 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் தகுதி தேர்வில் 20 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அடுத்த சுற்று தேர்வு எழுத முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ், உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி பாடங்களுக்கான இடைநிலை ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு இடங்கள் இருக்கிறது எந்த இட ஒதுக்கின் கீழ் அவை நிரப்பப்படும் என்ற விவரங்களும் இணையதளத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு 2024 ஜூலை மாதம் 53 வயது நிரம்பியவர்கள் பொது பிரிவின் கீழும் இட ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் உள்ளவர்கள் 58 வயது வரை உள்ளவர்களாகவும் விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள். தேர்வு கட்டணமாக பொது பிரிவினர் ரூபாய் 600 செலுத்த வேண்டும். 

இட ஒதுக்கீட்டு பிரிவினர் ரூபாய் 300 கட்டணம் செலுத்தினால் போதுமானது. தேர்வு கட்டணத்தை இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும், தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்