அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

Sep 08, 2026,01:27 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


"அறிவுடையார் எல்லாம் உடையார்" ஒரு நாட்டின் உண்மையான செல்வம் அங்குள்ள மக்களின் கல்வி அறிவே ஆகும். அனைவரும் கல்வி கற்க உறுதி ஏற்கும் வகையில் இன்று செப்டம்பர் 8ஆம் தேதி,செவ்வாய்க்கிழமை "சர்வதேச எழுத்தறிவு தினம்" கொண்டாடப்படுகிறது.


எழுத்தறிவின்மையை அறவே அழிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது.


எழுத்தறிவு என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்தின் அடிப்படையாகும். கல்வி மற்றும் எழுத்தறிவின் அவசியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அறியாமையை போக்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் எழுத்தறிவு தினமாக  கடைபிடிக்கப்படுகிறது.


ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமான யுனேஸ்கோ (UNESCO )அமைப்பு 1965 ஆம் ஆண்டு நவம்பர் 17 நாள் இந்த நாளை பிரகடனப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து  முதன் முதலில் 1966 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி 'சர்வதேச எழுத்தறிவு தினம்' கொண்டாடப்பட்டது.


நோக்கம்:




எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை உணர்த்தவும்,எழுத்தறிவு இல்லாத உலகை உருவாக்குவதே எழுத்தறிவு தினத்தின் முக்கியமான நோக்கமாகும். ஒரு மொழியை எழுதவும் படிக்கவும் தெரிந்திருப்பதே எழுத்தறிவு.ஒவ்வொரு தனி மனிதனும் எழுத்தறிவு பெற்றிருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. எழுத்துக்களை படிப்பது நம் அறிவை வளர்க்க உதவுகிறது.எழுத்தும், அறிவும் ஒன்று சேர்கையில் தனித்து செயல்படுவதற்கான ஆற்றல் கிடைக்கும். அந்த ஆற்றலை ஆக்கபூர்வமான பல செயல்பாடுகளுக்கு அடிப்படையாக அமைகிறது.  ஒவ்வொரு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆற்றலை குழந்தை பருவத்தில் இருந்தே  வளர்ப்பது சிறந்தது.


எழுத்தறிவின் சிறப்பு:


எழுத்தறிவு பெற்றவரால் மட்டுமே தனக்கான உரிமை,பாதுகாப்பு, பொருளாதாரம், நிர்வாகம்,ஆளும் திறமை,சிந்தித்து செயல்படுதல் ஆகியவற்றை புரிந்து செயல்பட முடிகிறது. குறிப்பாக பெண்களுக்கு எழுத்தறிவும், கல்வி அறிவும் அவசியமானவை.  ஒரு பெண்ணுக்கு கொடுக்கும் கல்வியானது அந்த குடும்பத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒரு குடும்பம் வளர்ச்சி அடைந்தால் நம் சமூகமே வளர்ச்சி அடையும். 


சமூக வளர்ச்சி ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமைகிறது. எழுத்தறிவின்மையை போக்குவதற்காக அரசும், தொண்டு நிறுவனங்களும் பல்வேறு திட்டங்களின் மூலம் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. சமூகத்தின் மேம்பாட்டுக்கு அஸ்திவாரமான எழுத்தறிவை அனைவரும் பெறுவதற்கு நம்மால் முடிந்த முயற்சிகளை இந்த நன்னாளில் சர்வதேச எழுத்தறிவு தினமாக கொண்டாடுவதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் முயற்சிகளை செய்வோம்.


முக்கியத்துவம்:


ஆரோக்கியமான குடும்பத்தையும், விழிப்புணர்வுள்ள சமூகத்தையும், வளர்ச்சியான நாட்டையும் உருவாக்க எழுத்தறிவு அவசியமாகிறது. கல்வி வேலை வாய்ப்புகளை பெருக்குகிறது. இது வறுமையை குறைக்க உதவுகிறது. எழுத்தறிவு பெற்ற ஒருவரால் மட்டுமே தனது உரிமைகளையும், கடமைகளையும் தெளிவாக புரிந்து சுயமரியாதையுடன் வாழ வழிவகிக்கிறது.


உலகில் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் அடிப்படை கல்வி மற்றும் வாசிப்பு திறன் இல்லாமல் சிரமப்படுகின்றனர். வறுமை,பாலின வேறுபாடு மற்றும் பள்ளிகளுக்குச் செல்ல இயலாத  சூழல் போன்ற காரணங்களால் எழுத்தறிவு விகிதம் இன்னும் முழுமையாக அடையப்படவில்லை.


சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதே இந்த நாளின் (எழுத்தறிவு தினத்தில்) முக்கிய நோக்கமாக நம் மனதில் கொண்டு செயல்படுவோமாக. ஒருவர் கல்வி மற்றும் எழுத்தறிவு பெரும்போது தன் சொந்த காலில் நிற்கவும்,நாட்டின் ஜனநாயக உரிமைகளை சரியாக புரிந்து கொண்டு செயல்படவும் உதவுகிறது.இதற்காக நாம் அனைவரும் முயற்சி செய்வோம்.


குருகுல கல்வி முதல் இன்று ஏ ஐ  (AI) மூலம் கல்வி கற்கும் வளர்ச்சி அடைந்துள்ளோம். இருப்பினும் அடிப்படை கல்வி கற்க இயலாத சூழ்நிலை பல இடங்களில் இன்னும் உள்ளது. அதற்காக இந்த சர்வதேச எழுத்தறிவு நாள் செப்டம்பர் 8ஆம் தேதி கொண்டாடுவதன் மூலம் அனைவருக்கும் கல்வி என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர்ந்து செயல்படுவோமாக.


மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. அதிமுக அதிரடி வேகம்.. விருப்பமனு விநியோகம் தொடக்கம்!

news

முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

news

எது மக்களாட்சி?

news

தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்