டெல்லி: இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபோன் 15 சீரிஸ் விற்பனை இந்தியாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. அனைத்து ஆப்பிள் ஸ்டோர்களிலும் இந்த போனை இன்று முதல் வாங்கலாம்.
இந்த மாத தொடக்கத்தில்தான் ஐபோன் 15 சீரிஸ் அறிமுகமானது. தற்போது இது இந்தியாவுக்கும் வந்து விட்டது. இன்று காலை 8 மணிக்கு இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனை தொடங்கியபோது நீண்ட வரிசையில் காத்திருந்து இளைஞர்களும், இளம் பெண்களும் ஐபோன் 15 சீரிஸ் போனை உற்சாகத்துடன் வாங்கிச் சென்றனர்.
முன்பே ஆர்டர் செய்தவர்கள் மட்டுமல்லாமல் நேரடியாக வந்தும் கூட இந்த போனை வாங்கிச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஆப்பிள் ஸ்டோருக்கும் அல்லது ரீ செல்லர் கடைகளில் இதை வாங்க முடியும். ஐபோன் 15, 15 பிளஸ், ஐபோன் 15 புரோ மற்றும் ஐபோன் 15 புரோ மேக்ஸ் ஆகியவை இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்தியாவில் ஐபோன் 15 போன்கள் ரூ. 79,000 என்ற விலையிலிருந்து கிடைக்கிறது. ஐபோன் 15 பிளஸ் விலை ரூ. 89,900 ஆகும். ஐபோன் 15 புரோ மற்றும் புரோ மேக்ஸ் ஆகியவற்றின் விலை முறையே ரூ. 1,34,900 மற்றும் ரூ. 1,59,900 ஆகும்
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}