பெய்ரூட்: லெபனானில் மீண்டும் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் மேலும் 300 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே நடந்து வரும் போரில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பானது ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. இதனால் கடந்த வாரம் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர் மற்றும் வாக்கிடாக்கி போன்ற கையடக்க தொலைதொடர்பு சாதனங்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.3000 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு காரணம் இஸ்ரோ என ஈரான் கடுமையாக குற்றம் சாட்டி வந்தது.

இந்த நிலையில் லெபனான் தலைநகர் தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள், தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு உள்ள மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். கடந்த ஐந்து நாட்களில் மட்டும் லெபனானில் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள் வெளியேறி சிரியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் ஏற்கனவே 700 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு நடந்த தாக்குதலால் மேலும் 300 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}