உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

Dec 29, 2025,10:19 AM IST

- க.சுமதி


பெங்களூர்: இந்திய  விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO அவ்வப்போது பிற நாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வெற்றி வகை சூடி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது அமெரிக்காவின் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி வெற்றி கண்டுள்ளது. இது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.


இந்திய விண்வெளி ஆய்வு மையமானது எல் வி எம் 3 எம் 6 ராக்கெட் வாயிலாக அமெரிக்காவின் ப்ளூ பேர்ட் பிளாக் 2 செயற்கைக்கோள் செலுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக 24ம் தேதி நிறைவேற்றியது. இந்த திட்டமானது புரிந்து உணர்வு ஒப்பந்தம் செய்த 52 வது நாளில் செய்து முடித்து இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.


இந்த செயற்கைக்கோள் மூலம் செல்போன்களுக்கான ஒலி மற்றும் ஒளி எனும் ஆடியோ வீடியோ அழைப்புகளை மொபைல் டவர்கள் இல்லாமலேயே துல்லியமாக வழங்கும் திறன் கொண்டது. மேலும் இது அதிவேக செல்லுலார் பிராட்பேண்ட் சேவைகளையும் எந்தவித துணைக்கருவிகளும் இல்லாமல் நேரடியாக வழங்கும்.


செல்போன் டவர்கள் இல்லாமல் ஒலி அலைகளை அனுப்பும் திறன் கொண்டதாகையால் கடலின் நடுவிலும் கண்ணாடி அறைக்குள்ளும் மேலும் அடர்ந்த காடுகளுக்குள்ளும் எளிதாக கைப்பேசி வாயிலாக நாம் வெளிஉலகை தொடர்பு கொள்ள முடியும்.


இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் வாயிலாக தகவல் தொடர்பு துறையில் புதிய தொழில்நுட்ப புரட்சியை அமெரிக்கா ஏற்படுத்தி உள்ளது.


விண்வெளி துறையில் அமெரிக்காவும் இந்தியாவும்




இந்தியா கடந்த 1963இல் தனது முதல் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது அப்போது செயற்கைக்கோள் ஏவுவதற்கான எந்த எந்த தொழில்நுட்ப வசதியும் இந்தியாவிடம் இல்லை. அப்பொழுது இந்தியா தனது  செயற்கைக்கோளை ஏவுவதற்காக அமெரிக்கவின் உதவியை நாடியது.


ஆனால் இன்று மிகப் பெரிய அளவில் விண்வெளித்துறையில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அதைத்தான் தற்போதைய ராக்கெட் லான்ச் நிரூபித்துள்ளது. எந்த அமெரிக்காவை நாடி நாம் சென்றோமோ, இன்று, அமெரிக்க நிறுவனமே அதன் மிக சக்தி வாய்ந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நாடி வந்துள்ளது உலகத்தோரை வியக்க வைத்துள்ளது.


இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சி


இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சியானது உலகத்தோரை வியக்க வைக்கும் வகையில் தற்போது வளர்ந்து வருகிறது.


ஒருபுறம் இந்திய பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் டி.ஆர்.டி.ஓ என்னும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை பிரம்மோஸ் போன்ற மிக சக்தி வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கி உலகில் பல நாடுகளுக்கு சந்தைப்படுத்தி இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO-வும் நாங்களும் சிறிதும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் விதமாக தற்போது உலகின் சக்தி வாய்ந்த வல்லரசு நாடான அமெரிக்காவின் செயற்கைக்கோளையே வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஊக்க சக்தியாக மாறி உள்ளது.


இந்த இரு நிறுவனங்களும் இணைந்து மிக விரைவில் இந்தியாவை உலக அளவில் ஓர் வல்லரசு நாடாக உருவாக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.


(க.சுமதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரச்சினைகள் நீங்கி இன்பமான வாழ்வு பெற ஏகாதசி விரதம் இருப்பது சிறப்பு!

news

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

சபரிமலை மண்டல பூஜை காலத்தில் ரூ.332.77 கோடி வருமானம்

news

மலேசியா என்றதும் இனி பிரகாஷ் ராஜ் ஞாபகமும் வரும்.. பார்த்திபன் போட்ட பலே டிவீட்!

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைவு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 29, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்

news

வாழ்வது ஒரு கலை!

news

மார்கழியில் அரங்கனும் இறங்குவான் அக்காரவடிசலுக்கு.. நாமளும் மயங்குவோம்.. சுவைக்கு!

news

எனதருமை எழுதுகோலே...!

அதிகம் பார்க்கும் செய்திகள்