திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. 60 ஆண்டு கால கூட்டணி முறிந்தது!

Jun 20, 2026,04:22 PM IST

சென்னை: திமுக உடனான சுமார் 60 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்டது.


கடந்த 1967ம் ஆண்டிலிருந்து திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில் 2026 சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பெரும் அரசியல் புரட்சிகள் நடந்தேறின. அதில் ஒன்றாக, தவெகவுடன் கூட்டணி அமைத்து, அமைச்சரவையிலும் முதல் முறையாக தமிழ்நாட்டில் இடம் பெற்றது முஸ்லீம் லீக்.


தவெக ஆட்சியில் இடம் பெற்றாலும் கூட திமுக கூட்டணியில் நீடிப்பதாகவே கூறி வந்தது முஸ்லீம் லீக். ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசா, வெளியிட்ட ஒரு சர்ச்சைக்குரிய விமர்சன எக்ஸ் பதிவால் முஸ்லீம் லீக் கட்சியினர் பெரும் அதிர்ச்சியுற்றனர். திமுக கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தி வந்ததாக கூறப்பட்டது.




இந்த நிலையில் இன்று முறைப்படி கூட்டணியை விட்டு வெளியேறியது முஸ்லீம் லீக். கட்சியின் மாநிலக் குழு திமுக கூட்டணியில் இருந்து விலக முறைப்படி முடிவெடுத்தது. 


சட்டமன்றத் தேர்தலில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற முஸ்லீம் லீக் சார்பில் பாபநாசம் எம்எல்ஏ ஏ.எம். ஷாஜகான் அமைச்சராக இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் வெளியேறின. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அங்கு இல்லை. இப்போது முஸ்லீம் லீக் கட்சியும் வெளியேறி விட்டது. இதில் இடதுசாரிகள் மட்டும் ஆட்சியில் பங்கேற்கவில்லை. மற்றவர்கள் தவெக அரசில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


திமுக கூட்டணியில் தற்போது பெரிய அளவிலான கட்சிகள் என்று எதுவும் இல்லை. மதிமுகவும் கூட தற்போது மன மாற்றத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். அக்கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். இருவரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள். விரைவில் இவர்களும் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை

news

பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

news

Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!

news

ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி

news

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி

news

போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ

அதிகம் பார்க்கும் செய்திகள்