"நீ என்ட் கார்டு வச்சா இவன் ட்ரெண்டெ  மாத்தி வைப்பான்" ... தெறிக்க விடும் ஜெயிலர் "ஹுக்கும்"!

Jul 18, 2023,02:05 PM IST
- சகாயதேவி

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படத்தின் 2வது பாடல் ஹுக்கும் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அசல் ரஜினி  ஸ்டைல்  பாடலாக இது ரசிகர்களை உசுப்பேத்தி உற்சாகப்படுத்திக் கொண்டுள்ளது. முதல் பாடலான காவாலா வெளியாகி அதன் சூடே இன்னும் குறையல.. ஆனால் முதல் பாடல் தமன்னாவால் ஹைலைடாகிவிட்டது. இப்போது பக்கா ரஜினி பாடலாக ஹுக்கும் வந்துள்ளது.

எந்த பக்கம் திரும்பினாலும் “காவாலா” சத்தமாக இருந்த நிலையில்  தான் அடுத்த பாடல் ஹுக்கும் வெளியானது. அந்தப் பாடல் நம்ம ரஜினியோட என்ட்ரி பாடல் . பாடல் வரிகள் மாஸாக உள்ளன.



இந்த பாடலின் முழு லிரிக்ஸ் இதோ உங்களுக்காக !

அலப்பறை கிளப்புறோம்.. **தா பாரு டா
கலவரம் எறங்குனா **தா டாரு டா
நிலவரம் புரியுதா.. உக்காருடா..
தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாரு டா..

வரமொற ஒடச்சிட்ட செட் ஆனவன்
தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்,
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்,
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்..

நடக்குற நடை புயலா..!
முடி ஒதுக்குற ஸ்டைலா..!
கனவில்லை இது ரியலாச்சே..!
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை..!

பளபள பளக்குற வெயிலா!
அடி 100க்கு டயலா..!
செத்துக்குற இடம் ஜெயிலாச்சே..!
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை..!

அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
உன் அலும்ப பார்த்தவன்.. 
உங்க அப்பன் விசில கேட்டவன்.. 
உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..

இவன் பேர தூக்க நாலு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா 
உசிரு கொடுக்க கோடி பேரு..

டைகர்கா ஹுக்கும்...

அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
நீ எண்டு கார்டு வச்சா இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்..
நீ குழிய பறிச்சு வச்சா இவன் மலையில் ஏறி நிப்பான்...

சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா
அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்
கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா
உச்சந் தலையில இடிதான்...

நரைச்சிருச்சுன்னு முறைச்சா
துரைகிட்ட வந்து கொலைச்சா
சிறையில் சிக்கி தொலையாதே
ஒரசற வரையில உனக்கொரு கொறையில..

தொட நெருங்கினா முடியாதே  
எது இழுக்குதுன்னு தெரியாதே
குள்ள நரிக்குது புரியாதே
விதிகளை திருப்புற
தலைவரு அலப்பற

உன் அலும்ப பார்த்தவன்
உங்க அப்பன் விசில கேட்டவன்
உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..
பேர தூக்க நாலு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா 
உசிரு கொடுக்க கோடி பேரு..

அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..

டைகர்கா ஹுக்கும்...

அர்த்தமாயிந்த ராஜா...!

இந்தப் பாடலை முதலில் வெளிவிட்டு இருக்கலாம் என்று ரசிகர்கள் கருது தெரிவித்து வருகிறார்கள் ...லேட்டா வந்தாலும் தலைவர் லேட்டஸ்டாச்சா.. என்ஜாய் ரசிகர்களே!

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்