"டே தம்பி".. ஜூலை 28ம் தேதி ரஜினிகாந்த்தின் ஜெயிலர் ஆடியோ ரிலீஸ்!

Jul 22, 2023,12:11 PM IST
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 28ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

ரஜினிகாந்த், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபல நடிகர்களும் படத்தில் நடித்துள்ளனர்.



ரஜினி ரசிகர்களிடையே, மிகப் பெரிய எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. நெல்சன் கடைசியாக இயக்கிய பீஸ்ட் படம் சரியாக போகவில்லை. இதனால் ஜெயிலர் படம்தான் நெல்சனின் தலைவிதியையும் நிர்ணயிக்கும் என்பதால் அவரும் நெர்வஸ்ஸாகவே உள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள காவாலா மற்றும் ஹும்கும் ஆகிய இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பட்டையைக் கிளப்பி வருகிறது. இதனால் படத்தின் பிற பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த் கடைசியாக நடித்த படம் அண்ணாத்த. அந்தப் படத்திற்குப் பிறகு வெளியாகும் ஜெயிலருக்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 

ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ள ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்