சென்னை: பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ராம்சரண் 16 படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும், குளோபல் ஸ்டார் ராம்சரணும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படம் ஆக உருவாகி வருகிறது ராம்சரண் 16 படம். இவர் ஏற்கனவே உப்பன்னா என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றவர். முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் இப்படத்தை வெங்கடசதீஷ் கிலாறு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
மிகப் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகும் RC16 படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெரும் வகையில் அமைய உள்ளது. இவரது பிறந்த நாள் இன்று என்பதால் படக்குழுவினர் ஜான்வி கபூருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் புச்சி பாபு சக்தி வாய்ந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளாராம். இது உலக அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்குமாம். மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெறும் ஏனைய நடிகர் , நடிகைகள் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்களை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என அறிவித்துள்ளனர்.
ஆஹா சூப்பர் ருசி -- மரவள்ளி கிழங்கு சுழியம்!
சுவையான மோர்க்குழம்பு.. வச்சு சாப்பிட்டுப் பாருங்க.. மறக்கவே மாட்டீங்க!
மாதவிடாய் வலியா.. இடுப்பு வலியா.. இருக்கவே இருக்கு பாரம்பரிய வைத்தியம்!
நன்றியுணர்வு மலரட்டும்.. Gratitude in Bloom: Don't Take Your Parents for Granted
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரம்.. புதிய தாக்குதலில் இறங்கிய ரஷ்ய ராணுவம்
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
ராத்திரி 11 மணியானா போதும்.. இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்வது இதைத்தானாம்!
பிரம்மாண்ட ப்ளூபேர்டை லாவகமாக கொண்டு சென்ற பாகுபலி!
{{comments.comment}}