ஆமா.. ஜான்வி  கபூருடன்.. திருப்பதிக்கு வந்தாரே.. அவர்தானா அது??

Aug 29, 2023,05:01 PM IST
மும்பை: நடிகை ஜான்வி கபூர் திருப்பதி கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டார். அவருடன், அவரது காதலர் என்று கிசுகிசுக்கப்படும் ஷிகார் பஹாரியாவும் உடன் வந்திருந்தார்.

ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான  ஜான்வி , திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தை  ஆவார். அடிக்கடி அங்கு வருவது வழக்கம். அந்த வகையில் நேற்றும் கூட அவர் வந்திரு்நதார். அப்போது அவருடன் வந்த நபர் குறித்துத்தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.



வயலட் கலர் சேலையில் படு சிம்பிளாக, அழகாக காட்சி அளித்தார் ஜான்வி. அவருடன் சட்டை அணியாமல் மேல் துண்டு மட்டும் போட்டு ஒரு இளைஞரும் சாமி கும்பிட வந்திருந்தார். அவர்தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறார். அவர்தான் ஷிகார் பஹாரியா. இருவரும் காதலித்து வருவதாக சமீப காலமாக செய்திகள் பரபரப்பாக ஓடிக் கொண்டுள்ளன.

இருவரும் பய பக்தியுடன் சாமி கும்பிட்ட பின்னர் காரில் ஏறிப் பறந்து விட்டனர்.  வழியில் செய்தியாளர்கள் காத்திருந்த நிலையில் அவர்களைப் பார்த்த ஜான்வி மெல்லிய புன்னகையை வீசி விட்டு போய் விட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு தனது தங்கை குஷியுடன் வந்திருந்தார் ஜான்வி. அப்போதும் பஹாரியா உடன் வந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவிந் பேரன்தான் பஹாரியா. இவரும், ஜான்வியும் மும்பை பப்கள், ரெஸ்டாரென்ட்டுகளில் ஜோடியாக சுற்றித் திரிகின்றனர்.  இருப்பினும் தாங்கள் காதலிப்பதாக இருவரும் இதுவரை  சொல்லவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!

news

இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு

news

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்

news

ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!

news

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?

news

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

news

தாத்தா (கவிதை)

அதிகம் பார்க்கும் செய்திகள்