- இ.கே.ஜோதி
டோக்கியோ: ஜப்பானில் ஹொக்காய்டோ தீவுக்குத் தெற்கே, ஆவோமோரி கடற்கரையில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு முக்கிய எச்சரிக்கையை அந்த நாட்டு அரசு விடுத்துள்ளது. அதில் 98 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் தாக்குதல் ஏற்படலாம், மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆவோமோரி கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிய சேதம் இல்லை, 34 பேருக்குச் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. ஆனால், இந்த அதிர்வு அந்தப் பகுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம் வரக்கூடும் என்ற அபாயத்தை தற்காலிகமாக அதிகப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் கூறினர். அதேசமயம், 8 அல்லது அதற்கு மேல் ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வர ஒரு சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றம் அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டுப் பேரழிவை மக்கள் மறந்து விடக் கூடாது. அதில் 20,000 பேர் உயிரிழந்தனர், புகுஷிமா அணு உலையிலும் விபத்து ஏற்பட்டது. இதை மனதில் வைத்து, மிக மோசமான நிலைக்கும் தயாராக இருக்க இந்த எச்சரிக்கை உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
இதில் இன்னொரு எச்சரிக்கையும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள அந்தத் தகவலில் அடுத்த ஒரு வாரத்திற்குள், சக்திவாய்ந்த (8-க்கும் மேல்) நிலநடுக்கம் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. கடற்கரை மக்கள் அனைவரும் கவனமாக இருக்கவும், அவசரப் பெட்டிகளைத் தயாராக வைத்திருக்கவும், தேவைப்பட்டால் உடனே பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பெரிய நிலநடுக்கம் எப்படி இருக்கும்?
அரசாங்கத்தின் கணிப்புப்படி, ஹொக்காய்டோ-சன்ரிகூ பகுதியில் மீண்டும் ஒரு பெரிய நிலநடுக்கம் வந்தால், அது 30 மீட்டர் (98 அடி) உயரத்திற்கு சுனாமியை ஏற்படுத்தும். இதனால் சுமார் 1,99,000 பேர் வரை உயிரிழக்கலாம், 2,20,000 கட்டிடங்கள் அழியலாம், மேலும் 31 டிரில்லியன் யென் ($198 பில்லியன்) அளவுக்குப் பொருளாதாரம் பாதிக்கப்படலாம்.
குளிர்காலத்தில் இது நடந்தால், 42,000 பேர் வரை குளிரால் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய எச்சரிக்கை ஹொக்காய்டோ முதல் சிபா மாகாணம் வரை 182 நகரங்களுக்கு விடப்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் வந்த மிகப் பெரிய எச்சரிக்கைகளில் ஒன்று.
ஜப்பானின் வடக்குப் பகுதிக்கு ஏன் அதிக ஆபத்து?
ஜப்பானின் அடியில் பசிபிக் தட்டு நகரும் ஹொக்காய்டோ-சன்ரிகூ கடற்கரைப் பகுதியில் திங்கட்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தப் பகுதியில்தான் ஜப்பான் அகழி (Japan Trench) உள்ளது. இந்தப் பள்ளங்கள்தான் ஜப்பானில் வரலாற்றில் ஏற்பட்ட பல மிகப் பெரிய நிலநடுக்கங்களுக்குக் காரணம்.
2011ஆம் ஆண்டின் மிகப்பெரிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியும் இந்த ஜப்பான் அகழியின் அசைவால்தான் ஏற்பட்டது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
2011ஆம் ஆண்டு 9.0 ரிக்டர் நிலநடுக்கம் வருவதற்குச் சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பு, 7.3 ரிக்டர் நிலநடுக்கம் அதே இடத்தில் வந்தது. இப்போதும் அதுபோலவே நடந்திருப்பதால், JMA இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
2011 சுனாமி சில இடங்களில் 15 மீட்டர் (50 அடி) உயரத்துக்கு வந்து, கடற்கரை நகரங்களை அழித்தது, புகுஷிமா அணு மின் நிலையத்தையும் சேதப்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.
(இ.கே.ஜோதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?
விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!
சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
தாயுமானவர்.. ராமநாதபுரம் மன்னர் செய்த அறியா தவறு.. இன்று வரை தொடரும் நம்பிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு
உலகிலேயே மிக நீளமான வார்த்தை எது தெரியுமா.. நாக்கும், வாயும் பத்திரம் பாஸ்!
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
{{comments.comment}}