- மீனா
சென்னை: கணவனை எப்படி ஐஸ் வச்சா நம்ம கிட்ட மடங்கிப் போய்க் கிடப்பார்னு மனைவிகளுக்கு சொல்லித் தரவே தேவையில்லைங்க.. பயங்கரமா யோசிப்பாங்க பாரு.. நமக்குத்தான் திகிலாக இருக்கும்!
அப்படிப்பட்ட அதி பயங்கரமான ஜோக்ஸைத்தான் இப்போ நீங்க படிக்கப் போறீங்க.. தைரியமா வாங்க பாஸ்.. ஜோக்குதானே.. ஜாலியா படிச்சுட்டு சிரிச்சுட்டுப் போய்ரலாம்.. அப்படியே கையோட நாலு பிஸ்கட்டும், சூடா டீயும் எடுத்துட்டு வாங்க.. (டீயை) குடிச்சுட்டே பார்க்கலாம்.
நீங்கதாங்க உலகமே!
கணவன்: என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?
மனைவி: என்னங்க இப்படி கேட்டுட்டீங்க. உங்களுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.
கணவன்: என்ன வேணும்னாலும் செய்வியா?
மனைவி: ஆமாங்க,இந்த உலகத்தோட போராடுவன், சண்டையிடுவேன், உலகத்தையே தலைகீழா புரட்டிப் போடுவேன்.
கணவன்: ஆனால் , இதையெல்லாம் நீ என்கிட்ட தான செய்துகிட்டு இருக்க .
மனைவி: ஆமாங்க ,நீங்க தான என்னோட உலகமே.
கணவன்:😳😳
குறுக்கே வந்த கெளஷிக்!
ஆசிரியர்: நான் தான் உங்களுக்கு தமிழ் பாடம் எடுக்க புதிதாக வந்திருக்கும் ஆசிரியர்
மாணவர்கள்: குட் மார்னிங் சார்
ஆசிரியர்: நான் உங்களுக்கு தமிழ் பாடம் எடுக்கிறதுனால, என்னுடைய வகுப்பில் நீங்கள் எல்லாரும் தமிழ்ல தான் பேசணும்
மாணவர்கள்: சரி ஐயா
ஆசிரியர்: உங்கள் பெயர், உங்களை பற்றி அறிமுகப்படுத்திக்கோங்க
மாணவன்: ஐயா மாட்டுக்கு உடம்பு சரியில்லை.
ஆசிரியர்: உங்க வீட்டு மாட்டுக்கு உடம்பு சரியில்லைன்னா எனக்கு என்ன. நான் கேட்டது உன்னுடைய பெயர்
மாணவன்: கௌஷிக் என்ற பெயரை தான் ஐயா தமிழில் சொன்னேன்.
ஆசிரியர்:😲😲
என்னா அடி ஆத்தாடி!
கணவன்: ஏண்டி பிள்ளைய போட்டு இப்படி அடிக்கிற?
மனைவி: நல்லா படிச்சா தான் நல்ல வாழ்க்கை அமையும், பெரிய ஆளான பின்னாடி நல்ல மனைவி அமைவானு சொன்னேன்.
கணவன்: நல்லது தானே சொல்லி இருக்க. அதுக்கு எதுக்கு அவன் அடிவாங்குறான்
மனைவி: அப்பாவையும் அவங்க அம்மா நல்லா படிக்க சொல்லி அடிச்சிருந்தா அப்பாவுக்கு நல்ல மனைவி அமைஞ்சி இருப்பாங்க இல்லனு கேட்கிறான் .
கணவன்:!!!!!
அதெல்லாம் தெரியும் பாஸ்.. கம்முனு கிடங்க!
நோயாளி: டாக்டர் வயிறு வலினு தான் வந்தேன். என்னை எதுக்கு lcu ல வச்சிருக்கீங்க
டாக்டர்: கொஞ்சம் அமைதியா இருங்க.
நோயாளி: டாக்டர்
எனக்கு ஒன்னும் இல்ல.
டாக்டர்: பொய் சொல்லாதீங்க .எனக்கு எல்லாம் தெரியும்.
நோயாளி: என்ன தெரியும் டாக்டர்?
டாக்டர்: உங்களுக்கு தாம்பரத்தில் சொந்தமாக பெரிய வீடு ,இடம் எல்லாம் இருக்குதுன்னு தெரியும்.
நோயாளி:😲😲
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}