சூடானை உலுக்கிய நிலச்சரிவு.. 1000 பேர் மாண்ட நிலையில்.. ஒருவர் மட்டும் பிழைத்த அதிசயம்!

Sep 02, 2025,06:11 PM IST

கார்டூம்: சூடானை உலுக்கியுள்ள மாபெரும் நிலச்சரிவில் சிக்கி 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார்.


நிலச்சரிவு நடைபெற்றது தர்புர் பிராந்தியத்தில் உள்ள மர்ரா மலைப் பகுதியாகும். இந்தப் பகுதி லைபீரியப் புரட்சிப் படை போராளிகள் வசம் உள்ளது. அரசின் வசம் இது இல்லாத காரணத்தால் இங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கில் எழுந்துள்ளது.


ஆகஸ்ட் 31 அன்று சூடானின் மர்ரா மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குறைந்தது 1,000 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒருவர் மட்டுமே பிழைத்தார். பலத்த மழையின் காரணமாக இந்த பேரழிவு ஏற்பட்டது. இந்த பிரதேசம் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த ஒரு கிராமம் முற்றிலும் தரைமட்டமாகி விட்டதாக லைபீரியப் புரட்சிப் படைத் தலைவர் அப்தெல்வாஹித் முகமது நூர் தெரிவித்துள்ளார்.




அங்கு வீடுகள் மற்றும் குடும்பங்கள் இடிபாடுகளில் புதைந்துள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட தர்புர் பிராந்தியத்தில் உடல்களை மீட்க, நிவாரண உதவிகளைச் செய்ய ஐ.நா மற்றும் சர்வதேச அமைப்புகளின் உதவியை போராளிகள் நாடியுள்ளனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் இறந்துள்ளனர். சூடானில் ஏற்கனவே உள்நாட்டுப் போர் உள்ளது. ஒரு மோசமான சூழ்நிலை நிலவுகிறது. சூடான் ராணுவம் மற்றும் போராளிகள் இடையே உள்நாட்டுப் போர் நடக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலர் மர்ரா மலைகளில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள்தான் தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.


வடக்கு தர்புர் மாநிலத்தின் தலைநகரான அல்-பாஷிர் நகரில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதனால் மக்கள் மர்ரா மலைகள் போன்ற தொலைதூர இடங்களுக்கு செல்கிறார்கள். அங்கு அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. அவசர உதவி கிடைப்பதும் கடினமாக உள்ளது. சூடானில் நடக்கும் உள்நாட்டுப் போர் இரண்டாவது ஆண்டாக தொடர்கிறது. இதனால் பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பசியால் வாடுகிறார்கள். மருத்துவ வசதிகள் கிடைப்பதும் கடினமாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது...எந்தெந்த பொருட்களின் விலை குறையலாம்?

news

கிடுகிடு வென உயர்ந்து புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.640 உயர்வு!

news

ஓணம் வந்தல்லோ.. திருவோணம் வந்தல்லோ.. களை கட்டி வரும் கேரளத்து திருவிழா!

news

எப்போ தான் பாஸ் களத்துக்கு வருவீங்க?.. குமுறும் தவெக.,வினர்.. வேகம் காட்டுவாரா விஜய்?

news

"ஒவ்வொரு திருமணமும் சிறப்பானது".. கிரிஸில்டாவின் புகாருக்கு.. மாதம்பட்டி ரங்கராஜ் தந்த மறைமுக பதில்

news

அனிருத் இல்லாமல் இனி இயக்க மாட்டேன்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 03, 2025... மகிழ்ச்சி அதிகரிக்க போகும் ராசிகள்

news

செப். 5ம் தேதி மனம் திறந்து பேசுவேன்.. செங்கோட்டையன் திடீர் அறிவிப்பு..அதிமுகவில் மீண்டும் சலசலப்பு

news

ஒன்றிணையாத அதிமுக.. ஓபிஎஸ்ஸைக் கண்டுக்காத இபிஎஸ்.. மீண்டும் சேர்க்காததற்கு இது தான் காரணமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்