ஏம்மா மாலா.. டீ கேட்டது ஒரு குத்தமாம்மா!

Aug 19, 2023,11:30 AM IST
- மீனா

சென்னை: என்னங்க வேலையெல்லாம் முடிஞ்சிருச்சா..? இந்தப் பக்கம் மழை பெய்யப் போற மாதிரி கிளவுடியா இருக்கு.. உங்க ஊர்ப் பக்கம் என்ன நிலவரம்.

நேத்து எங்க வீட்டுக்காரர் ஒரு கடி ஜோக் சொன்னார்.

"கிரிக்கெட் பேட்டை வைத்து கிரிக்கெட் விளையாட முடியும்.
ஹாக்கி பேட்டை வைத்து ஹாக்கி விளையாட முடியும்.
டென்னிஸ்   பேட்டை வைத்து டென்னிஸ் விளையாட முடியும். 
ஆனால் ...
கொசு பேட்டை வைத்து கொசு கூட விளையாட முடியுமா?!!"

இப்படிப்பட்ட கடி ஜோக்ஸுக்கு இன்று வரை கூட மவுசு இருக்கத்தான் செய்யுது மக்களே.. என்னதான் பாஸ்ட் பார்வர்ட் உலகில் நாம் வாழ்ந்தாலும் கூட ஆற அமர நாலு ஜோக்ஸை நறுக்குன்னு கேடு, நக நகன்னு அகம் குளிர சிரிக்கும்போது கிடைக்கும் சுகமே அலாதிதான்.. வாங்க சிரிச்சுட்டு வரலாம்!

மகள்: அம்மா, எங்க ஸ்கூல்ல கதை சொல்ற போட்டி இருக்குமா ஏதாவது ஒரு நல்ல கதையை சொல்லுங்க. நான் கண்டிப்பா பிரைஸ் வாங்கியே ஆகணும்.
அம்மா: திடீர்னு இப்படி கேட்டா எப்படிம்மா எனக்கு தெரியும் . எதுவுமே ஞாபகத்துக்கு வரலையே.
மகள்: போங்கம்மா, என் பிரெண்ட்ஸ் எல்லாரிடமும் இந்த போட்டியில் நான் ஜெயிச்சு காட்டுகிறேன் பாருங்க என்று
சவால் விட்டு இருக்கேன் தெரியுமா .
அம்மா: அப்படியா, சரி கொஞ்சம் பொறுமையா இரு காலைல போன உங்க அப்பா இன்னும் வீட்டுக்கு வரவே இல்ல, நான் வந்த உடனே ஏன் இவ்வளவு நேரம் கேட்பேன். அதுக்கு அப்புறம் பாரு நீயே  எதிர்பார்க்காத அளவிற்கு உனக்கு நல்ல நல்ல கதையா கிடைக்கும் சரியா.



--

மனைவி: ஏங்க, எங்க   போனீங்க காலைல இருந்து நான் உங்களை தேடி கிட்டு இருக்குறேன்.
கணவன்: ஆபீஸ்க்கு வந்துட்டேன் மா.
மனைவி: நான்  காலையிலிருந்து உங்களை பார்க்கல. எப்படி கிளம்பி போனீங்க ,அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு ஆபீசுக்கு எப்ப போனீங்க ?
கணவன்: இல்ல "சனி பார்வை சங்கடம்" என்று என்னுடைய ராசி பலனுக்கு போட்டு இருந்துச்சு மா. அதான் உன்ன பாக்காமலே சீக்கிரமாக ஆபீஸ்க்கு வந்துட்டேன் மா.
மனைவி: நைட் தூங்குறதுக்கு  வீட்டுக்கு தான வரணும் வாங்க.

--

கணவன்: மாலா டீ   போட்டுதாமா
மனைவி:  கொஞ்சம் பொறுமையா இருங்க போட்டு எடுத்துட்டு வரேன்.
கணவன்:  கொஞ்சம் சீக்கிரம் போட்டு எடுத்துட்டு வாமா
மனைவி: இந்தாங்க 
கணவன்:  என்னமா டீ ரொம்ப காரமா இருக்கு.
மனைவி: திடீர்னு மசாலா டீ கேட்டா நான் என்ன பண்றது. அதான் கறி குழம்புக்கு  அரைச்ச மசாலா கொஞ்சம் மீதி இருந்துச்சு அதுல டீ போட்டா   அப்படித்தான் இருக்கும்.
கணவன்: நான் எங்கம்மா மசாலா டீ கேட்டேன். மாலா டீ போட்டு  தாமான்னு தானே கேட்டேன்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்