அடடா.. பரிசு மழை.. கலாநிதி மாறன் எப்படி கவனிச்சிருக்காரு பாருங்க!

Sep 11, 2023,12:37 PM IST
சென்னை: ஜெயிலர் படம் வெற்றியடைந்ததை கொண்டாடும் விதமாக அந்தப் படத்தில் பணியாற்றியவர்களுக்கு விருந்து வைத்து பரிசும் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

கடந்த மாதம் 10 ஆம் ஜெயிலர் படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இதில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன், தமன்னா ,யோகி பாபு போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர் .சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்களின் பெரும் ஆதரவும், வரவேற்பும் பெற்று படம் வெற்றி அடைந்தது. 600 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது.




படம் பிரமாண்ட வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து ரஜினிகாந்த்துக்கு BMW X7 கார், இயக்குநர்  நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு porche விலையுந்த காரை பரிசாக அளித்தார் கலாநிதி மாறன். கூடவே ரஜினிக்கும், அனிருத்துக்கும் அடுத்த படத்துக்கான காசோலைகளையும் அப்போதே கொடுத்து விட்டு வந்தார் கலாநிதி மாறன்.

விக்ரம் பாணியில்

இந்த நிலையில்  தற்போது ஜெயிலர் படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு தங்க நாணயத்தை பரிசாக அளித்து, கூடவே பிரியாணி விருந்தும் அளித்துள்ளார்.  இயக்குனர் நெல்சன் "ஜெய்லர் படத்தை மகத்தான வெற்றியடைய செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



கடந்த வருடம் 2022 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் இதனை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றை பரிசாக அளித்தார் நடிகர் கமல்ஹாசன். அதேபோல கறி விருந்தும் வைத்துக் கெளரவித்தார். தற்போது அதே பாணியில், ஜெயிலர்  பட கலைஞர்களுக்கு காரும், குழுவினருக்கு  கறி விருந்தும் அளித்துள்ளார் கலாநிதி மாறன்.

சமீபத்திய செய்திகள்

news

காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

news

திமுக அரசு குற்றம் நடைபெறாமல் தடுப்பதில்லை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதுமில்லை: அண்ணாமலை

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

BCCI.. மாத்துறோம்.. மொத்தமா மாத்துறோம்.. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு.. பிசிசிஐ முடிவு!

news

Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!

news

திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்