சென்னை : கமல் திரையுலகில் அடியெடுத்து வைத்து 63 ஆண்டுகள் நிறைவடைந்து, 64 வது ஆண்டு துவங்கியதை கொண்டாடி, வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு கமல் அளித்துள்ள பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது.
நடிகர் கமலஹாசன் சினிமாவில் அறிமுகமாகி நேற்றுடன் 63 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. தற்போது 64 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கமலை பாராட்டி அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, கமலை பாராட்டி ட்விட்டரில் போஸ்ட் போட்டிருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனால் கமல் தொடர்பான ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகின.

ரசிகர்கள் உள்ளிட்டோரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் போஸ்ட் போட்டுள்ளார் கமல். அதில், 64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசி தான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னை விட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக... என குறிப்பிட்டுள்ளார்.

கமலின் இந்த பதிவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. என்ன ஒரு பக்குவமான வார்த்தை...ஆண்டவர், ஆண்டவர் தான் என ரசிகர்கள் பலர் பாராட்டி உள்ளனர். இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பலர் கமலை கேட்டுக் கொண்டுள்ளனர்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}