தில் இருந்தா மூஞ்சிக்கு நேரா வந்து பேசுங்க பார்ப்போம்.. டிரம்புக்கு சவால் விட்ட கமலா ஹாரிஸ்!

Jul 31, 2024,07:55 PM IST

வாஷிங்டன்:   அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு சவால் விட்டுள்ளார், துணை அதிபரும், ஜனநாயகக் கட்சி வேட்பாளரா களம் இறங்கும் கமலா ஹாரிஸ்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். முன்னாள் அதிபரான டிரம்ப், 2வது முறையாக அதிபர் ஆகும் கனவுடன் களம் குதித்துள்ளார். மறுபக்கம் தற்போதைய அதிபர் ஜோ பிடன் போட்டியில் இருந்து வந்தார். ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அவர் போட்டியிலிருந்து விலகி விட்டார்.




ஜோ பிடனுக்குப் பதில் துணை அதிபர் கமலா ஹாரிஸை ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கவுள்ளது. கமலா ஹாரிஸ் அறிவிப்பால் தொய்வடைந்திருந்த ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர். கருத்துக் கணிப்புகளிலும் டிரம்ப்பை முந்த ஆரம்பித்துள்ளார் கமலா ஹாரிஸ்.


இந்த நிலையில் விரைவில் கமலா ஹாரிஸுக்கும், ஜோ பிடனுக்கும் இடையே விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது இதைத்தான் ஜனநாயகக் கட்சியினர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். காரணம், ஜோ பிடனுக்கும் - டிரம்ப்புக்கும் இடையே நடந்த விவாதத்தில் பிடன் பெருமளவில் சொதப்பியிருந்தார். இதை டிரம்ப் கேலி செய்து தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு விட்டார். விவாதத்தின் காரணமாகத்தான் ஜோ பிடன் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. எனவே எந்த இடத்தில் ஜனநாயகக் கட்சிக்கு சரிவு ஏற்பட்டதோ அங்கிருந்தே அதிரடி காட்ட கமலா ஹாரிஸ் ஆர்வமாக உள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது ஆதரவாளர்களிடையே பேசும்போது, நல்லது டொனால்ட், விவாத மேடையில் என்னை சந்திப்பதை நீங்கள் மறுபரிசீலனை செய்வீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், ஒரு பழமொழி உண்டு. உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் அதை என் முகத்துக்கு நேராக சொல்லுங்கள் என்று கூறியுள்ளார் கமலா ஹாரிஸ். அவரது இந்த ஓபன் சேலஞ்ச்  ஜனநாயகக் கட்சியினரிடையே பயங்கர ஆதரவை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்

news

நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்

news

களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

news

உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!

news

எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)

news

2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்

news

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!

news

செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்