கமல்ஹாசன்.. கமிட் ஆன.. அடுத்த புது படம்.. ரெடி!

Sep 08, 2023,09:28 AM IST
சென்னை: நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து அடுத்த புதுப் படத்தில் இணைய உள்ளார். கமலின் அடுத்த படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்குகிறார்.

இது கமலின் 233 வது படமாகும். வலிமை , நேர்கொண்ட பார்வை, துணிவு போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் கமல்ஹாசனின் 233 வது படத்தை இயக்க உள்ளார்.



கடந்த ஆண்டு கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்தது. வசூலையும் வாரிக் குவித்தது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெட்டப் சேஞ்ச் செய்து நடித்துள்ளார். இந்தப் படம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால்,சித்தார்த், ராகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் என பெரிய பட்டாளமே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர்  எச். வினோத் இயக்கத்தில் நடிகர் கமல் இணைய உள்ள படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் துப்பாக்கி பயிற்சி எடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் கமலின் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்