- ஸ்வர்ணலட்சுமி
சென்னை : இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா நவம்பர் 02ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டியும், காப்பு கட்டாமலும் முருகப் பெருமானை வேண்டி விரதம் இருந்து வருகின்றனர். குறிப்பாக திருச்செந்தூர் திருத்தலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விரதம் இருந்து வருகின்றனர். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நவம்பர் 08ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 07ம் தேதியும், முருகப் பெருமானின் திருக்கல்யாண வைபவம் நவம்பர் 08ம் தேதியும் நடைபெற உள்ளது. தற்போது கந்தசஷ்டி விழாவின் நான்கு நாட்கள் கடந்து விட்டன. நாளை கந்தசஷ்டியின் ஐந்தாம் நாள். கந்தசஷ்டி விழாவின் மிகவும் அற்புதமான, முக்கியமான திருநாள் இதுவாகும். கந்தசஷ்டியின் ஐந்தாம் நாளில் தான் முருகப் பெருமான் போருக்கு புறப்படுவதற்கு முன் அன்னை பராசக்தியிடம் இருந்து சக்திவேல் வாங்கும் நிகழ்வு நடைபெறும். சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் அன்னையிடம் வேல் வாங்கும் போது முருகப் பெருமானின் திருமேனியில் வியர்க்கும் அதிசயம் இந்த நாளில் தான் நடைபெறும்.
சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு புறப்படும் முருகப் பெருமானுக்கு அளிப்பதற்காக, உலகில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றாக்கி, அதோடு தன்னுடைய சக்தியையும் இணைத்து வேலாக உருமாற்றினார் சிவ பெருமான். அந்த வேலை அப்படியே பராசக்தியிடம் கொடுத்தார். அன்னை பராசக்தி, அந்த வேலில் தன்னுடைய சக்தியையும் சேர்த்து சக்திவேலாக முருகப் பெருமானிடம் வழங்கினார். அன்னை வழங்கிய சக்திவேலை முருகப் பெருமான் தன்னுடைய திருக்கரத்தில் வாங்கியதும் அது வெற்றிவேலாக மாறியது. அந்த வேலைக் கொண்டு மாமரமாக உருமாறிய சூரனின் உடலை இரண்டாக கிழித்து, ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை சேவற் கொடியாகவும் மாற்றி தன்னுடன் வைத்துக் கொண்டார் முருகப் பெருமான்.
கந்தசஷ்டியின் இந்த அற்புதமான ஐந்தாம் நாளில் நாமும் வேலை வழிபட்டு, வேலை போற்றும் மந்திரங்களை சொல்லி வழிபடுவதால் முருகனின் அருள் கிடைப்பதுடன், நம்முடைய வேண்டுதல்களும் உடனடியாக நிறைவேறும்.
சொல்ல வேண்டிய மந்திரம் :
கந்தசஷ்டியின் 5ம் நாளில் முருகப் பெருமானின் அருளை பெருவதற்கு இந்த ஒரு வார்த்தை மந்திரத்தை சொன்னாலே போதும்.
ச ர வ ண ப வ
ர வ ண ப வ ச
வ ண ப வ ச ர
ண ப வ ச ர வ
ப வ ச ர வ ண
வ ச ர வ ண ப
இந்த நாளில் வேல் மாறல் படித்து, வேல் பூஜை செய்வது சிறப்பு. வேல்மாறல் பதிகத்தை முழுவதுமாக படிக்க முடியாதவர்கள், " ஓம் முருகா சரணம். வேலும் மயிலும் சேவலும் துணை" என 6 முறை சொல்லி விட்டு,
"திருத்தணியில் உதித்தருளும்
ஒருத்தன்மலை விருத்தன் என
துளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குஹன் வேலே" என்ற வேல்மாறலின் துவக்க அடியை 6 முறை சொன்னாலே போதும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}