பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத்.. ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.. முக்கிய கதாபாத்திரத்தில்!

May 09, 2025,02:00 PM IST

மும்பை: பிரபல நடிகை கங்கனா ரனாவத் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். "Blessed Be The Evil" என்ற திகில் படத்தில் அவர் நடிக்கிறார்.


Lions Movies நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. கங்கனா ரனாவத்துடன், டைலர் போஸி மற்றும் ஸ்கார்லெட் ரோஸ் ஸ்டலோன் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த கோடையில் நியூயார்க்கில் தொடங்க உள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்ட அதிரடி வரிவிதிப்பு காரணமாக அமெரிக்காவிலேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். அனுராக் ருத்ரா இந்த படத்தை இயக்குகிறார்.  அவரும் கத்தா திவாரியும் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். வேட் முல்லர் ஒளிப்பதிவு செய்கிறார்.


பாஜகவைச் சேர்ந்த கங்கனா ரனாவத் தற்போது லோக்சபா எம்பியாக வலம் வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.




இந்த படத்தின் கதை ஒரு கிறிஸ்தவ தம்பதியைப் பற்றியது. அவர்கள் குழந்தை இழந்த பிறகு ஒரு பண்ணை வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு ஒரு தீய சக்தி அவர்களை தொந்தரவு செய்கிறது. அதன் பிறகு நடப்பது குறித்துதான் படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.


இயக்குனர் ருத்ரா கூறுகையில், நான் கிராமத்தில் வளர்ந்தபோது கேட்ட கதைகள் தான் இந்த படத்திற்கு காரணம். நான் இந்தியாவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். அப்போது நிறைய கதைகள் கேட்டேன். அந்த கதைகள் என் மனதில் பதிந்துவிட்டன. அந்த கதைகளை உலகிற்கு சொல்ல விரும்புகிறேன். இந்த படம் நிறைய சஸ்பென்ஸ்களைக் கொண்டுள்ளது. படத்திற்கு நிறைய வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.


தேசிய விருது பெற்றவரான கங்கனா ரனாவத்  கடைசியாக "Emergency" என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியாக நடித்ததற்காக அவருக்கு பாராட்டு கிடைத்தது. பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இப்போது அவர் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

விஷாலை திருமணம் செய்யப் போகிறேன்.. ஆகஸ்ட் 29ல் கல்யாணம்.. அறிவித்தார் சாய் தன்ஷிகா

news

தமிழகத்தில் இயல்பை விட 90 % அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை: விசிக தலைவர் திருமாவளவன்!

news

கர்னல் சோஃபியா குறித்த சர்ச்சை கருத்து... அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது... உச்சநீதிமன்றம்!

news

Operation Sindoor: பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் திட்டத்தை.. இந்தியா முறியத்தது எப்படி?

news

வயதான தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது... போராட்டம் கைவிடப்படுகிறது... அண்ணாமலை அறிவிப்பு!

news

மீண்டும் மீண்டுமா.. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

news

வேளாண்துறை வீழ்ச்சி தான் திமுக ஆட்சியின் சாதனையா?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்