செக்ஸை பெட்ரூமில் வச்சுக்கலாமே.. ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சி குறித்து .. கங்கனா ரனாவத் விமர்சனம்

Jul 28, 2024,01:29 PM IST

டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இடம் பெற்ற ஒரு காட்சி குறித்து நடிகையும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். செக்ஸ் என்பது பெட்ரூமுக்குள் இருக்க வேண்டியது. அதை பகிரங்கமாக பொது வெளியில் வெளிப்படுத்துவது அநாகரீகம் என்று அவர் கூறியுள்ளா்.


அதாவது ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது தி லாஸ்ட் சப்பர் விருந்து நிகழ்ச்சியை முரல் பெயின்டிங் மூலமாக  சித்தரித்திருந்தனர். அதைத்தான் செக்ஸியாக இருப்பதாக கூறியுள்ளார் கங்கனா. பிரபல ஓவியர் லியானார்டோ டாவின்சி வரைந்த ஓவியத்தை நிஜமான கலைஞர்களை வைத்துக் கொண்டு வந்திருந்தனர். அதைத்தான் விமர்சித்துள்ளார் கங்கனா.




வெள்ளிக்கிழமையன்று பாரீஸில் தொடக்க விழா கோலாகலமாக நடந்தது. 4 மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியை கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரில் கண்டு களித்தனர். பிரமாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் 18 கலைஞர்கள் கலந்து கொண்டு தி லாஸ்ட் சப்பர் நிகழ்வை தத்ரூபமாக கொண்டு வந்திருந்தனர். பலரையும் இது கவர்ந்தது.


ஆனால் இதை செக்ஸியாக இருந்ததாக கங்கனா விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், தி லாஸ்ட் சப்பர் என்ற பெயரில் அதீதமான செக்ஸ் காட்சியை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஒரு சிறுமியும் கலந்து கொண்டதைப் பார்க்க முடிந்தது. இது தவறான செயல். ஒரு ஆண் நிர்வாண கோலத்தில் இயேசு நாதர் உருவத்தில் வருகிறார். கிறிஸ்தவ மதத்தையும் அவர்கள் கிண்டலடித்துள்ளனர். அவமானமாக இருக்கிறது. செக்ஸ் பெட்ரூமில்தான் இருக்க வேண்டும்.


மேலும் இது ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பது போல உள்ளது. அதற்கு எதிரானவள் அல்ல நான். ஆனால் ஒலிம்பிக்ஸில் இதற்கு என்ன தொடர்பு இருக்கிறது? ஏன் விளையாட்டில், அனைத்து நாடுகளும் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியில் இதை கொண்டு வருகிறீர்கள்.. திறமையை வெளிக்காட்ட வேண்டிய இடத்தில் செக்ஸ் எதற்கு.. பெட்ரூமோடு அதை நிறுத்தலாமே.. இதை ஒரு தேசிய அடையாளமாக்குவதா.. ரொம்ப வினோதமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் கங்கனா.


கங்கனா மட்டுமல்ல, எலான் மஸ்க் உள்ளிட்ட பலரும் கூட இந்த நிகழ்ச்சியை விமர்சித்துள்ளனர். இது  கிறிஸ்தவ மதத்தை அவமதித்துள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்