அவங்களை கேள்வி கேட்கக் கூடாது.. மீறிக் கேட்டா "ICE" வைப்பாங்க.. கனிமொழி அதிரடி பேச்சு!

Jan 21, 2024,05:43 PM IST

சேலம்: எதையும் நாம் கேள்வி கேட்கக் கூடாது. கேள்வி கேட்டால், அவர்கள் ICE வைப்பாங்க.. ஐஸ்னா என்ன.. இன்கம்டாக்ஸ், சிபிஐ மற்றும் இடி என்று திமுக எம்.பி. கனிமொழி அதிரடியாக பேசியுள்ளார்.


சேலத்தில் திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு காலையில் கொடியேற்றித் தொடங்கி வைத்த கனிமொழி, மாலையில் உரையாற்றினார். அவரது பேச்சிலிருந்து சில துளிகள்:




நாம் பெரியாரின் பிள்ளைகள். கொள்கைகள் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிரோம். நாளை வட இந்தியாவில் கோவில் திறக்கிறார்கள். அதைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை. ஏன் குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை என்று கூட நான் கேட்கப் போவதில்லை. பிரதமர் நாளை கோவிலைத் திறக்கிறார், இன்று சேத்ராடனம் செய்து கொண்டிருக்கிறார். அதுகுறித்தும் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்கே  அறநிலையத்துறை அமைச்சர் இருக்கிறார். அவரைக் கேட்கிறேன். கோவிலை கட்டி முடிக்காமல் திறக்காலாமா.. திறக்கக் கூடாதுல்ல.. கோவிலை கட்டி முடிக்காமல் திறக்கக் கூடாது.


ஆனால் பாஜக என்ன சொல்லுது. நாங்க தான் இந்து மதத்தை காக்கிறோம், சனாதனத்தைக் காப்பாத்துறோம் எல்லாக் கோவிலையும் எங்க கிட்ட கொடுத்துடுங்கன்னு சொல்றாங்க. கட்டி முடிக்காத கோவிலை திறக்கக் கூடாது என்பது இந்து மதம். அதை அரசியலாக்கி, உங்களுடைய அரசியல் லாபத்துக்காக இந்துக்களை மதி்ககாமல், அவர்களுடைய உணர்வுகளை மதிக்காமல், சங்கராச்சாரியார்களே, வர மாட்டோம் என்று சொல்லும் அளவுக்கு அரசியலைப் புகுத்தி அதைத் திறக்கிறார்கள். 


தனியார் டிரஸ்ட் திறக்கும் கோவிலுக்கு அரசு ரயில்கள் விடுது,  இதெல்லாம் நாம கேள்வி கேட்கக் கூடாது. கேள்வி கேட்டால் "ஐஸ்" வப்பாங்க. ஐஸ்னா என்ன.. "இன்கம்டாக்ஸ், சிபிஐ, இடி".. இது மூனும் நம்மைத் தேடி வரும். இதற்கெல்லாம் பயப்படக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. இங்கு யாரும் இல்லை. என்ன பண்ணினாலும், எதிர்ப்போம். கருத்துக்களை எதிர்த்து நிற்போம். மத்திய ஆட்சியை மாற்றிக் காட்டுவோம், அதில் மாற்றம் இல்லை என்றார் கனிமொழி.


சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்