சானியா மிர்ஸா சாதனையை முறியடித்த கர்மான் தண்டி.. !

Jul 24, 2023,12:17 PM IST
டெல்லி: ஐடிஎப் டபிள்யூ 60 டென்னிஸ்  தொடரில் பட்டம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் கர்மான் தண்டி.

இதுவரை சானியா மிர்ஸா மட்டும்தான்  அமெரிக்காவில் நடைபெறும் தொழில்முறைப்  போட்டி ஒன்றில் பட்டம் வென்று சாதனை படைத்த ஒரே வீராங்கனையாக இருந்து வந்தார். தற்போது அந்த இடத்தை கர்மான் பிடித்து புதிய பெருமையைத் தேடிக் கொண்டுள்ளார்.



அமெரிக்காவில் நடைபெறும் தொழில்முறை டென்னிஸ் தொடர்தான் இந்த ஐடிஎப் டபிள்யூ 60 போட்டியாகும். இதன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி கர்மான் ஏற்கனவே சாதனை படைத்திருந்தார். தற்போது இறுதிப் போட்டியில் அவர் உலகின் 294வது வீராங்கனை யூலியா ஸ்டரோஸ்டப்ட்ஸ்வாவை 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்று அதிர வைத்தார்.

இந்த வெற்றியின் மூலமாக அவர் தற்போது உலக மகளிர் டென்னிஸ் தர வரிசையில் 210வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் அமெரிக்க ஓபன் போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கும் அவர் தகுதி பெற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தென்றலே... என் தொலைந்து போன நிழலே!

news

இந்தியா பக்கம் வராதீங்க.. அப்புறம் அடி தாங்கமாட்டீங்க!.. பாக். அணிக்கு ஸ்ரீகாந்த் எச்சரிக்கை!

news

சேலம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் மாசி திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!

news

அடிமட்ட மக்களுடன் நெருக்கமாக இருந்தவர் அஜீத் பவார்.. பிரதமர் மோடி இரங்கல்

news

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜீத் பவார்.. விமான விபத்தில் உயிரிழப்பு!

news

சரத் பவார் - அஜீத் பவார்.. குரு சிஷ்யராக.. தந்தை மகனாக.. நெகிழ வைத்த உறவு!

news

மகாராஷ்டிராவை அதிர வைத்த அஜீத் பவார் விமான விபத்து.. மறக்க முடியாத தலைவர்!

news

தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக

news

விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்