- கவிதா உடையப்பன்
வான் நட்சத்திரங்களை மண்ணில் கண்டேன்
வாசல் தோறும் வாய்மையடி!
விண்மீன்களைத் தொட்டேன்
விடைகள் கிடைத்தன விக்னங்கள் இன்றி!
கோலத்துடன் கதைத்தேன்
காலம் நின்று காத்ததடி!
வண்டுகள் என்னைச் சுற்ற
வாடாது நின்றேனடி!

உள்ளக் கூம்புகளை கொளுத்தினேன்
கள்ளக் கபடங்கள் ஒழிந்ததடி!
அகல் விளக்கினுள் திரிந்தேன்
அண்டமே அதுதானடி!
நாடிகளை ஒடுக்கினேன்
தேடி வந்ததடி "ஜோதி"!
நெய் உருகி தீபத்திற்கு துணை ஆனது
மெய் உருகி பிரம்மத்திற்கு இணை ஆனது!
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
மழலை முதல் முதுமை வரை!
தேனல்லவே தேனல்லவே.. வழிந்ததெல்லாம் தேவாமிர்தம்!
சின்ன சின்ன விளக்குகள்... சிங்கார விளக்குகள்....!
நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் ரிலீஸூக்கு இடைக்காலத் தடை: உயர்நீதி மன்றம்
கார்த்திகையில்!
Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்
Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
{{comments.comment}}