- கவி நிலவு சுமதி சிவக்குமார்
வெங்காயம்
வெட்டுப்பட்டது என்னவோ
வெங்காயம் தான்
கண்ணீர் வடித்தது கண்கள்!
மெழுகுவர்த்தி
அறுந்து விழுந்தது என்னவோ
மின்சார கம்பி தானே
நெருப்பூட்டி அழுதது மெழுகுவர்த்தி!
பூட்டு சாவி

தொலைந்து போனது என்னவோ
சாவி தானே
மண்டை உடைந்தது பூட்டு!
நெல்
உதைபட்டது உரல்!
ஏர்
விளைவது என்னவோ
பயிர் தானே
கீறப்படுவது நிலம்!
பட்டாடை
பட்டாடை என்னவோ
பாரம்பரியம் தானே
உயிர் நீத்தது பட்டுப்பூச்சி!
(சுமதி சிவக்குமார்.. B. A., M. com., (co-op mgt)., M. A ., (yoga) ., DOM., (computer)., . கள்ளக்குறிச்சி மாவட்டம் மூஙகில்துறைப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது ஊரில் ஏரிக்கு நீர் கொண்டு வர இணையும் கைகள் என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார் உயர்திரு அப்துல் ரஹீம் அவர்கள். நீர் நிரம்பி இருமுறை கோடி போனது. அதனால் கோமுகி நதியை வாழ்த்தி நடந்தால் வாழீ கோமுகி என்ற கவிதையை பதிவிட்டார் சுமதி சிவக்குமார். முகநூலில் நிறைய கவிதை தளங்களில் கவிதைப் போட்டி நடுவராகவும் கவியரங்கம் தலைவராகவும் திகழ்கிறார். கிட்டத்தட்ட 3000 சான்றிதழ்கள் 50 ஷீல்டுகள் பரிசு பெற்றுள்ளார். நாட்டுப்புற பாடல் எழுதி பாடவும் செய்வார். மதியின் மதி என்ற கவிதை புத்தகம் , தெம்மாங்கு பாடலா என்ற நாட்டுப்புற பாடல்கள் புத்தகம் வெளியிட்டுள்ளார். சின்னசேலம் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவையின் செயலாளராக செயல்படுகிறார்)
பூம்பூம் மாடு வளர்ப்பவர்களுடன் 'காணும் பொங்கல்' கொண்டாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஸ்டாலின் 2...இபிஎஸ் 5...போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசும் திமுக-அதிமுக
அதிமுக-திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் சாத்தியமா?...வாங்க தூர்வாரலாம்
திமுக-அதிமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகள்...என்ன செய்ய போகிறார் விஜய்?
பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வழக்கம்: அண்ணாமலை
ஒருவரால் புறக்கணிக்கப்பட்டால்.. இன்னொருவரால் கொண்டாடப்படுவோம்.. இதுதான் வாழ்க்கை!
தமிழ்நாட்டின் பசுமைப் புரட்சிக்கான முன்னோடி.. ஜான் பென்னிகுயிக்
இணைவோம்.. கொண்டாடுவோம்.. Get together
எனக்கு நானே சிறந்த தோழி.. I am the best friend of me
{{comments.comment}}