விருதுநகர்: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோவில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை. இருந்திருந்தால் அது வெளிப்பட்டிருக்கும். கரூர் சம்பவம் குறித்து விஜய் கேள்வி கேட்பது தவறு என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாட்டத்தில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், விஜய் பேசியது திரைப்பட வசனம் போல் உள்ளது. இது நல்ல அணுகுமுறை அல்ல. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோவில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை. இருந்திருந்தால் அது வெளிப்பட்டிருக்கும். மற்ற இடத்தில் இல்லாமல் கரூரில் மட்டும் இப்படி நடந்தது எப்படி? என விஜய் கேட்டது தவறு.
திரைக்கவர்ச்சியில் விஜய் நாட்டை ஆள முயற்சிக்கிறார். திரை மயக்கம், திரை போதையில் உள்ளார். விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும்? சிம் சார் என விஜய் கூறியது சிறுபிள்ளைத்தனம். இனிமேல் இதுபோன்று நடக்காது என்று அவர் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை உணராமல் பேசியுள்ளார்.
கரூர் சம்பவத்தால் பின்னடைவு.. வலுவாக தாக்கும் திமுக.. கூட்டணியைத் தேடும் நிலையில் விஜய்?
கரூர் சம்பவத்தில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை.. விஜய் கேள்வி கேட்பது தவறு.. சீமான்!
பாஜக விஜய்யை காப்பாற்றி... கரூர் சம்பவத்தில் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றன: செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
ஆபத்தான அரசியல் இது.. கரூர் துயரத்தில் விஜய்க்கு கொஞ்சம் கூட கவலையில்லை: திருமாவளவன் பாய்ச்சல்
திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ்!
பாமக இளைஞர் அணி தலைவராக .. ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமனம்
இறைவனே எழுதிய திருவாசகம்!
வித்யாரம்பம் நிகழ்வு... கல்விக் கண் திறப்பு விழா.. தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி
{{comments.comment}}