சென்னை: கரூரில் நடந்த தனது கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியானது குறித்து பெரும் வேதனை தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
தவெக தலைவர் விஜய் இன்று இரவு கரூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருந்த இடத்திற்கு விஜய் வருவதற்கே பெரும் சிரமப்பட நேரிட்டது. இந்த நிலையில் அவரது கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 36 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த நாட்டையும் இந்த சம்பவம் உலுக்கி எடுத்துள்ளது.

கூட்டம் முடிந்ததும் விஜய் கிளம்பிப் போன பிறகுதான் அங்கு நடந்த விபரீதமே தெரிய வந்தது. திட்டமிட்டபடி திருச்சி சென்ற விஜய் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். அவர் மீண்டும் அரசு மருத்துவமனைக்குத் திரும்பி வந்தால் மீண்டும் கூட்டம் கூடும், மேலும் பிரச்சினை பெரிதாகும் என்பதால்தான் அவரை சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் இரங்கல் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் அறிக்கை விடுத்துள்ளார். அதில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார் விஜய்.
வானுலகின் பேரொளியில், ஒரு பொக்கிஷம்.. Divine Gift!
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
மலை போல வந்ததா? மழை போல வந்ததா? .. ஒரு மொழித் தேடல்!
வேகம் விவேகமானதா..?
செம்மையாக வாழ வேண்டும்.. எப்படி தெரியுமா.. ஸ்டீபன் ஹாக்கிங் போல!
ஜனநாயகன் இழுபறி தொடர்கிறது.. பாரசக்திக்கு யுஏ கிடைத்தது.. திட்டமிட்டபடி நாளை ரிலீஸ்!
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பாடம்!
மகாலட்சுமியின் வடிவம்.. பூமாதேவியின் அம்சம்..வராகி அம்மன் சிறப்புகள்!
பொங்கலுக்கு ரூ.3000 கொடுக்க...விவசாயிகளின் பயிர்க் கடன் பணத்தை மடைமாற்றிய திமுக அரசு: அண்ணாமலை
{{comments.comment}}