தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

Oct 03, 2025,01:11 PM IST

மதுரை: தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு.


புதிதாக கட்சி ஆரம்பித்த தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதியன்று  கரூரில் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.  ஏற்கனவே 3 கட்ட சுற்றுப்பயணம் முடிந்த நிலையில் கரூரில் 4ம் கட்டமாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 




இந்த சம்பவம் தொடர்பாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல வழக்குகள் தவெக தரப்பு, தமிழக அரசு தரப்பு உள்ளிட்டோர் சார்பில் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில்,  4 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,  3 வழக்குகளை விசாரித்து முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.


இந்தநிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், செந்தில்குமார், பிரபு, பாலகிருஷ்ணன், விக்னேஷ், இளையராஜா உட்பட 10 பேர் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால், முன் ஜாமின் கேட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சதீஷ்குமாருக்கு முன் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தது உயர்நீதிமன்ற மதுரைகிளை. மேலும், தொண்டர்கள் அடாவடி குறித்து தெரியாது என எப்படி கூறலாம்? தவெகவினர் செயல்பாடுகளால் ரூ.5 லட்சம் அளவுக்கு சேதம் கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? - தவெக மாவட்ட செயலாளருக்கு உயர்நீதிமன்றம் ரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரைபடத்தில் இருந்தே அழித்து விடுவோம்.. கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க மாட்டோம்.. ராணுவ தளபதி

news

கரூர் சம்பவம்... சிறப்பு புலனாய்வு குழு நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

news

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்: கீழடி குறித்த முதல்வர் முக ஸ்டாலினின் நெகிழ்ச்சி பதிவு!

news

கேதார கெளரி விரதம்.. சிவபெருமானுக்குரிய அஷ்ட மகா விரதங்களில் முக்கியமானது

news

இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பாஜக: முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம்

news

தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

news

கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி...கோர்ட் அதிரடி உத்தரவு

news

210 தொகுதிகளில் அதிமுக வெல்லும்..அதற்கு சாட்சி தருமபுரியில் கூடிய இந்த கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டும் இல்லீங்க... இன்றும் சவரனுக்கு ரூ.880 குறைவு தான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்