வட இந்தியாவில் வெகு விசேஷமாக கொண்டாடப்படும் கர்வா செளத்.. அப்படி என்றால் என்ன?

Oct 09, 2025,01:38 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


கர்வா சௌத்.. விசுவாசு வருடம் 2025 அக்டோபர் மாதம் பத்தாம் நாள் வெள்ளிக்கிழமை "கர்வா சவுத் " பண்டிகை தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பு வருகிறது. இந்து பஞ்சாங்கத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத சதுர்த்தி திதியில் "கர்வா சௌத்" விரதம் பல்வேறு மாநிலங்களில் உள்ள திருமணமான பெண்கள் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை ஆகும்.


 "கர்வா  சௌத் " என்ற சொல் இரண்டு சொ ற்களை கொண்டது. இதில் "கர்வா "என்பது "மண் பானை "என்றும்    "சௌத் "என்பது "நான்காவது "என்றும் பொருள். பௌர்ணமி முழு நிலவிற்கு பிறகு நான்காவது நாளில் இந்த பண்டிகை கோலாகலமாக இந்தியாவில் முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்து சூரிய உதயம் முதல் சந்திர உதயம் வரை விரதம் இருந்து ஒரு நாள் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகை இது.


இந்த பண்டிகை கொண்டாடப்படும் இடங்கள் :




இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் முதன்மையாக பஞ்சாப் ராஜஸ்தான் இமாச்சலப் பிரதேசம் ஹரியானா குஜராத் மற்றும் உத்திரபிரதேசத்தில் திருமணமான இந்து மற்றும் சீக்கிய பெண்கள் இந்த பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடனும் கடுமையான விரதம் இருந்து கொண்டாடப்படுகிறது.


பண்டிகையின் முக்கியத்துவம்:


இந்திய கலாச்சாரத்தில் மிகுந்த மதிப்பை கொண்டுள்ள கர்வா  சௌத் பண்டிகைக்கான ஏற்பாடுகள் பல நாட்களுக்கு முன்பே தொடங்குகின்றன. திருமணமான பெண்கள் புதிய ஆடைகள் நகைகள் ஒப்பனை மற்றும் பூஜை பொருட்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்குகிறார்கள். அவர்களுடைய கைகளிலும், கால்களிலும் அழகாக மெஹந்தி   பூசப்பட்டு கர்வா சௌத் பூஜை  தாலிகள்  அலங்கரிக்கப்படுகின்றன. குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரும் மற்றும் அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்கள் அந்தி சாயும் முன் ஒரு கோவில், வீடு அல்லது தோட்டத்தில் கூடுகிறார்கள்.இங்கு அனைத்து பெண்களும் ஒன்றாக "கரவா சௌத் வழிபாட்டை செய்கிறார்கள். இந்த நேரத்தில் சாணம் மற்றும் மஞ்சள் மண்ணால் ஆன பார்வதி தேவியின் சிலை  செய்கின்றனர் .இன்றைய காலங்களில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மாதா கௌரி சிலையை வழிபாட்டிற்கு  வைக்கப்படுகிறது. பெண்கள் 16 அலங்காரங்களுடன் பிரகாசமான மற்றும் வண்ணமயமான ஆடைகள்,அணிகலன்கள் கை நிறைய வளையல்கள் அணிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.


பெண்கள் மட்டுமே கொண்டாடும் இந்த பண்டிகை "சோலா  ஸ்ரிங்கர் " அல்லது 16 அலங்காரங்கள் என்ற ஆன்மீக பாரம்பரியத்தை அழகாக சித்தரிக்கிறது. மங்கள சூத்ரா,  சிந்தூர் தூர் அல்லது குங்குமம், நாத் (மூக்கு வளையம் ), கட (வளையல்கள் ), காதணிகள், ஹார், மெஹந்தி, கணுக்கால் மற்றும் கால் மோதிரங்கள், கோல்(காஜல் ),காதணிகள், தொங்கும் ஆபரணங்கள் என இவ்வகையான 16 அலங்காரங்கள், ஆபரணங்கள் தங்கள் அழகை அதிகரிக்கவும், திருமணத்தின் மூலம் தங்கள் வாழ்க்கையில் கொண்டு வரப்படும் புனித மாற்றத்தை சித்தரிக்கவும் அணிகின்றனர். விரதம் மேற்கொள்ளும் பெண்கள் சந்திரன் உதயத்தில் தங்கள் கணவரின் கையால் அருந்தப்படும்  தண்ணீரால் விரதம் முடிவடைகிறது.


புராண கதைகள் :


ஒவ்வொரு இந்திய பண்டிகையும் ஆன்மீகம் மற்றும் புராண முக்கியத்துவம் பெற்றுள்ளது. அன்பு மற்றும் பக்தியின் பண்டிகையான கர்வா சௌத் பல புராணக் கதைகளுடன் தொடர்புடையது. 


மகாபாரத கதை : மகாபாரத இதிகாசத்தில் அர்ஜுனன் தனது சகோதரர்களான பாண்டவர்களையும், மனைவி திரௌபதியையும் விட்டுவிட்டு நீலகிரி மலைக்கு தியானம் செய்ய சில நாட்கள் சென்றான். அவரது மனைவி பதட்டம் அடைந்து கிருஷ்ணனின் உதவியை  நாடினாள். அர்ஜுனனின் நல்வாழ்வுக்காக விரதம் இருக்குமாறு கிருஷ்ணர் அறிவுறுத்தினார்.சிவனின் பாதுகாப்பிற்காக பார்வதி தேவியும் அவ்வாறே செய்தார் என்று அவளுக்கு நினைவூட்டினார். திரௌபதி கிருஷ்ணரின் அறிவுரைப்படி கவனமாக பின்பற்றி அனைத்து சடங்குகளுடன் விரதத்தை கடைப்பிடித்தார். விரைவில் அர்ஜுனன் வீடு திரும்பினார் என்று மகாபாரத கதை நமக்கு அறிவுறுத்துகிறது.


சத்தியவான் சாவித்திரி கதை :


சத்தியவானின் ஆன்மாவை எமன் பிடிக்க வந்தபோது,சாவித்திரி எமனிடம் தன் கணவருக்கு உயிர் கொடுக்கும்படி வேண்டினாள்.அவர் மறுத்ததால் நீண்ட நேரம் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ இல்லாமல் உண்ணாவிரதம்  மேற்கொண்டாள். சாவித்திரியின் பக்தியை பற்றி அறிந்ததும் எமன் அவர் தனது நோக்கத்தை கைவிட்டு தனது கணவரின் உயிரை வழங்கினார் என்னும் கதையும் கூறப்படுகிறது.


பூஜை:


பூஜைக்கான ஏற்பாடுகள் மாலையில் இருந்தே தொடங்குகின்றன. "கர் வா  சௌத்  கஹானி" அல்லது "கர்வா சௌத் கதா" அதாவது பண்டிகை பற்றிய கதை அக்கம் பக்கத்தில் உள்ள திருமணமான பெண்களுக்கு இதனை பற்றிய கதைகள் விவரிக்கப்படுகின்றன. பெண்கள் தங்கள் பிரார்த்தனைகளை பார்வதி தேவியிடம் சமர்ப்பித்து தங்கள் கணவரின் மகிழ்ச்சி,நீண்ட ஆயுள் மற்றும் செல்வ செழிப்பு ஆகியவற்றை கூறுகிறார்கள். இறுதியாக பெண்கள் புனித பாடலை பாடுகிறார்கள்.


வானத்தில் சந்திரன் தோன்றிய உடன் நோன்பை முடிக்க வேண்டிய நேரம் இது. பெண் தனது கர்வா சவுத் தாலியை ஒரு சல்லடை, இனிப்புகள்,விளக்குகள் மூலம் தயாரித்து கர்வாவில் தண்ணீரை ஊற்றுகிறாள்.சந்திரனை தெளிவாக காணக்கூடிய இடத்திற்குச் சென்று அவளுடைய கணவர் அவள் முன் நிற்கும்பொழுது முதலில் சல்லடை வழியாக சந்திரனையும், பின்னர் தன்னுடைய கணவனையும் பார்த்துவிட்டு சந்திரனுக்கு தண்ணீர் வழங்குகிறாள். கணவன் அவளுக்கு ஒரு சிட்டிகை உணவு அல்லது இனிப்புகளை ஊட்டுவதன் மூலம் அல்லது ஒரு ஸ்பூன் தண்ணீர் குடிக்க வைப்பதன் மூலம் உண்ணாவிரதம் முடிகிறது. தன் கணவரின் கால்களை தொட்டு ஆசீர்வாதங்களை பெறுகிறாள். மேலும் எப்பொழுதும் அவருடன் இருக்க சபதம் செய்கிறாள்.

 கணவர் தன்னுடைய மனைவியின் பிரார்த்தனைகளையும் அர்ப்பணிப்பையும் மதிக்கும் வகையில் அவளுக்கு பிடித்தமான பரிசுகளை வழங்குகிறார். கணவன் மனைவி இடையே ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டு அன்பு பரிமாற்றம் ஏற்படும் சிறந்த  பண்டிகையாகும்   இந்த  "கர் வா சௌத்".


மேலும் இன்று பிறந்தநாள், திருமண நாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள். இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள். தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வானிலை விடுத்த அலர்ட்.. இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களுக்குனு தெரியுமா?

news

கோவையின் புதிய அடையாளம்... ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

முத்துராமலிங்கத் தேவர் பெயரை நீக்கியவர்கள்.. ஜி.டி. நாயுடு பெயரைச் சூட்டியது ஏன்?.. சீமான் கேள்வி

news

எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

news

அன்று ஆட்சியருடன்.. இன்று ஆளுநருடன்.. மாறுவேடத்தில் அசத்தி வரும் யோகஸ்ரீ!

news

வட இந்தியாவில் வெகு விசேஷமாக கொண்டாடப்படும் கர்வா செளத்.. அப்படி என்றால் என்ன?

news

யாராவது ஏதாவது செய்து விடலாம் என விஜய் அஞ்சுவது போல தெரிகிறது.. நயினார் நாகேந்திரன்

news

திமுகவில் உறுதியாக தொடர்கிறேன்.. நான் ஏன் தவெகவுக்குத் திரும்ப வேண்டும்.. வைஷ்ணவி

news

தினம் தினம் புதிய உச்சம் அடைந்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்