தமிழ் சொல்லின் பெருக்கம்

Feb 27, 2026,02:38 PM IST

- கவிதா உடையப்பன், சேலம் 


சொல்லச் சொல்ல கேட்கவில்லை - வருத்தம் 

சொல்லாமல் இருந்தால் தோன்றுமா - திருத்தம் 


சொல்லை கோர்த்திடும் புலவர் - விருத்தம் 

சொல்லச் சொல்லி கேட்டிடுவார் - விருப்பம்


நற் சொல்லாலே வழங்கிடலாம் - மருத்தம்

சொல்லிழுக்கு படாமல் வாழ்வது - சருத்தம்


என்னவென்று சொல்ல முனைவது - கருத்தம்

சொல்லிற்கு தலையசைத்தால் - புருத்தம் 




நெஞ்சில் வைத்த சொல் - இறுக்கம் 

சொல்லாத சொல்லிலும் - இரக்கம்


குறளில் சொற்களோ - சுருக்கம்

சொல்லித் தீராத - பொருள் பெருக்கம்


சொல்லிற்கு சொல் மிக - பொருத்தம்

தமிழ் சொற்களின் இடையே உள்ளது -  இணக்கம்


இம்மொழியை கேட்கக் கேட்க வருகுதய்யா -  மயக்கம்

சொல்லிற்கு இயைந்து செயல்படுகிறது - இயக்கம் 

 

சொல்ல வந்த சொற்களின் - விளக்கம்

சொல்லிவிட்டேன் இல்லை - கலக்கம் 


சொல்ல யோசித்தால் வந்துவிடும் - தயக்கம்

சொல்லிவிட்ட பின் வருமையா?  - நல்ல உறக்கம்


சொல்வதைக் கேட்பது - நல்ல பழக்கம் 

சான்றோர் சொல்லி வைத்தனர் - உரிய வழக்கம்


சொல்லின் வலம், சொற்றொடர்களின் களம்

தமிழோடு வாழ்வதே என்றென்றும் நலம்


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்