சென்னை: தொகுதி மறு வரையறை தொடர்பாக திமுக நாளை நடத்த உள்ள கூட்டத்தில் பங்கேற்க கேரளா முதல்வர் பினராயி விஜயன் சென்னை வந்தார். அவரை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர்.
2026 ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதிகளை மறு சீரமைப்பு செய்தால் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் 31 ஆக குறைய கூடும். மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி வரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் தொகுதி மறு சீரமைப்பை மேலும் 30 வருடங்களுக்கு நீட்டி வைக்க வேண்டும் என்ற மத்திய அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும், தொகுதி மறு சீரமைப்பால் தமிழகத்தின் உரிமை பாதிக்கப்பட்டு விடக்கூடாது எனக் கூறி மத்திய அரசுக்கு எதிராக அனைத்து கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டும் என கட்சிகளுக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 5ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பு பிரச்சனையால் பாதிப்பு ஏற்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளை கொண்டு கூட்டு நடவடிக்கை குழு அமைத்து மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அனைத்துக் கட்சிகளும் முன்மொழிந்தன.
இதனைத் தொடர்ந்து தொகுதி மறு வரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ பாதிப்புகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஒடிஷா, மேற்கு வங்காளம், பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதலமைச்சர்கள் சென்னையில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டம் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். மேலும் அந்த மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களை தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள் குழு நேரில் சந்தித்து அழைப்பும் விடுத்தது.
தமிழ்நாடு முதல்வரின் அழைப்பை ஏற்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதேபோல பஞ்சாப் பிரதிதிகளும் வந்துள்ளனர். அவர்களை எம்பி. அருண் நேரு வரவேற்றார்.
டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
{{comments.comment}}