பொள்ளாச்சி: மலை ஏற்றத்தின் போது கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் அஜ்சாள் சைன் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த மருத்துவர் அஜ்சாள் சைன்(26) மற்றும் பாத்தில்(27) ஆகிய இருவரும் முறையான அனுமதி பெற்று பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் மலைப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டனர்.அப்போது திடீரென இருவருக்கும் உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனை அறிந்த மலைப்பாதை வழிகாட்டிகள் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அஞ்சாள் சைன் மூச்சு திணறி உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் முறையான விழிப்புணர்வு இன்மையால் மலையற்றத்தின் போது பலரும் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு காரணம் என்ன..?

மலை ஏறும் போது உயரம் கூடும்போது, ஆக்ஸிஜன் அளவு குறையும். இதனால், தலைவலி, வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் வரும். இதனால் நோய் தீவிரமடைந்து, உயிரிழப்பு ஏற்படலாம்.
அதேபோல் மலைகளில் வெப்பநிலை திடீரென மாறும்போத, உடல் உஷ்ணம் குறைதல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
பனி மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால், அது மிகவும் ஆபத்தானது. பனியில் அடிபட்டு காயங்கள் ஏற்படலாம், புயல் காரணமாக வழியில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
குறிப்பாக மாரடைப்பு, வெப்ப அதிர்ச்சி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் மலையேற்றத்தின் போது ஏற்படலாம். இதய நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மலையேற்றம் செய்யக்கூடாது.
மலையேற்றம் செய்ய தேவையான பயிற்சி, உபகரணங்கள் இல்லாதவர்கள் உயிரிழப்புக்கு ஆளாகலாம். உதாரணமாக, சரியான பாதுகாப்பு உபகரணங்கள் (rope, helmet, gloves) இல்லாமல் மலையேற்றம் செய்வது ஆபத்தில் தான் போய் முடியும்.
அருட்பெரும் ஜோதி.. தனிப்பெரும் கருணை.. ராமலிங்க அடிகளார் வள்ளலாராக மாறிய கதை!
இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது
பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
தாறுமாறாக ஏறி வரும் தங்கம் விலை.. எப்படிச் சமாளிப்பது.. நகைக்கான மாற்று வழிதான் என்ன?
தீண்டாமையை ஒழிப்போம்.. சம தர்ம சமத்துவத்திற்கான உறுதிமொழி ஏற்போம்!
விநாயகர் தலையில் அகத்தியர் வைத்த மூன்று கொட்டு.. நட்டாற்றீஸ்வரர் திருக்கோவில் மகிமை!
இந்தியாவின் வீரத் திருமகன்கள்.. காந்தியார் மறைந்த தினம்.. தேசிய தியாகிகள் தினம்!
தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு
{{comments.comment}}