சென்னை: பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவி மகள் குஷி கபூர் தமிழில் நடிக்க வருகிறார்.
மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வாவுக்கு ஜோடியாக குஷி கபூர் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழில் ஒரு காலத்தில் ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்தவர் ஸ்ரீதேவி. அப்போதைய முன்னணி நாயகர்களான கமல், ரஜினி தொடங்கி சிவாஜி வரை பலருடனும் இணைந்து நடித்தவர். கூடவே தெலங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தவர் பின்னர் இந்திக்குப் போனதும் தேசிய நடிகையாகி விட்டார்.
80களில் இவர் நடித்த தமிழ் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர். தயாரிப்பாளரான இவர் தமிழில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, துணிவு,
வலிமை போன்ற படங்களை தயாரித்துள்ளார். நடிகை ஸ்ரீ தேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர். ஜான்வி ஏற்கனவே ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இரண்டாவது மகள் குஷி கபூரும் இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது குஷி கபூர் தமிழ் படத்தில் அறிமுகமாக உள்ளார் . அதர்வா ஜோடியாக குஷி கபூர் நடிப்பதாகவும், விக்னேஷ் சிவனின் உதவியாளர் இயக்குவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமல்ல இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தை இந்தியில் எடுக்கவுள்ளனர். இதிலும் குஷி நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்
ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!
நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
{{comments.comment}}