நடிக்க ஆசையா இருக்கா.. அப்ளை பண்ணுங்க.. கிருத்திகா உதயநிதி அழைப்பு

Jul 19, 2023,01:55 PM IST
சென்னை: ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகப் போகும் புதிய படத்தில் நடிக்க, நடிப்பு ஆர்வம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இயக்குநர் கிருத்திகா உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தனது அடுத்த படத்தை தொடங்கப் போகிறது. இப்படத்திற்கு நடிகர் நடிகைகள் தேவை என்று அந்த நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார்.



ஆண்கள், பெண்கள்  எல்லா வயதிலும்  தேவை என்றும், ஆண் பெண் குழந்தைகள் 7 முதல் 10 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.  நடிப்பில் ஆர்வமும்,  திறமையும் கொண்ட யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   3 புகைப்படங்கள் மற்றும் நடிப்புத் திறமையை வெளிக்காட்டும் வகையிலான வீடியோக்களை இணைத்து 2023castingteam@gmail.com என்ற இமெயிலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உங்களுக்கு நடிக்க ஆசையாக இருந்தால் விண்ணப்பிக்கலாமே!

கிருத்திகா உதயநிதி ஒரு இயக்குநர் ஆவார். வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குநரானார் இவர். சிவா - பிரியா ஆனந்த் நடித்த இப்படத்தை கிருத்திகாவின் கணவர் உதயநிதி ஸ்டாலின் தயாரித்தார். சதையை மீறி என்ற இசை ஆல்பம் ஒன்றையும் அவர் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருந்தார். 

அதைத் தொடர்ந்து காளி என்ற படத்தை இயக்கினார். அதன் பின்னர் பேப்பர் ராக்கெட் என்ற வெப்சீரிஸை இயக்கியுள்ளார். தற்போது அடுத்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கப் போவதாக தெரிகிறது. அதற்குத்தான் தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?

news

பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

news

இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்

news

அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?

news

தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?

news

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 24, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும்

news

உஷார் மக்களே உஷார்... கோவை மற்றும் நீலகிரிக்கு வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்