- ஸ்வர்ணலட்சுமி
கொடுமுடி கோவில் குறித்து இப்போது பார்க்கப் போகிறோம். அந்தக் கோவிலின் புராண வரலாறும்,காவிரி ஆறும் அகத்தியரும் பற்றிய தகவல்களை காண்போம்...
கோவில்களுக்குப் பெயர் போனது தமிழ்நாடும், இந்தியாவும். இங்கு இல்லாத கோவில்களே இல்லை. உலகிலேயே அதிக கோவில்கள் இருப்பது இங்குதான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கோவில் சிறப்பாக உள்ளது. அந்த வகையில்தான் கொடுமுடி கோவிலும் அமைந்துள்ளது.
திருப்பாண்டி கொடுமுடி இத்தலத்தின் பெருமைகளை தொகுத்து வடமொழியிலும்,தென் மொழியிலும் புராணங்கள் உள்ளன.. திருப்பாண்டி கொடுமுடி புராணம் என்னும் நூலில் உள்ள பாடல்களில் இதனைப் பற்றிய வரலாறு உள்ளது. ஆனால் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
கொடுமுடி வரலாறு:

புராண காலத்தில் இந்திரன் சபையில் வாயு தேவனுக்கும், ஆதிசேடனுக்கும் அவர்களுடைய வலிமையை குறித்து வாதம் நிகழ்ந்த போது ஆதிசேடன் மேருமலையின் சிகரங்களை அசையாது சுற்றிக் கொண்டான். ஆனால் வாயு தேவனோ தன்னுடைய வலிமையால் மேருவின் சிகரங்களை மோதி தகர்த்தான். அப்போது அவன் தகர்த்த ஐந்து துண்டுகள்,ஐந்து மணிகளாக,ஐந்து இடங்களில் விழுந்து ஐந்து தலங்கள் உருவாகின என்று புராண வரலாறு கூறுகிறது.
அவைகளில் சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலை ஆகவும், மரகதம் விழுந்த இடம் திருஈங்கோய் மலையாகவும், மாணிக்கம் விழுந்த இடம் ரத்தினகிரி சிவாய மலையாகவும், நீலமணி வீழ்ந்த இடம் திருப்பொதிகை மலையாகவும், ஐந்தாவதாக வைரம் விழுந்த இடம் கொடுமுடியாகவும் அமைந்தன.
கொடுமுடி என்பது பெரிய சிகரம் என்று பொருள்படும். மலைச்சிகரமே மகுடக லிங்கராக அமைந்துள்ளது. மற்ற சிகரங்கள் எல்லாம் மலைகளாக காட்சி,தந்து கொடுமுடி மட்டும் லிங்க வடிவமாக அமைந்துள்ளது. கொடுமுடி ஒரு மலைச்சிகரமாகும். இதற்கு சான்று புராண பாடல்களில் அமைந்துள்ளன.
அகத்தியரும் காவிரியும்:
இமயகிரியில் சிவபிரானுக்கும், பார்வதிக்கும் திருமணம் நிகழ்ந்த போது,தேவர்கள் மானிடர் முதலியார் ஒன்று கூடியதால் வடதிசை தாழ்ந்தது,அதனால் பெருமாள் பூமியைச் சமம் செய்யும்படி அகத்தியரை தென்திசையில் உள்ள பொதிகை மலைக்கு அனுப்பினார். அகத்தியர் தென்திசை வந்து கொங்குநாடு அடைந்து ஒரு மலையில் தங்கி தவம் செய்தார். அகத்தியரின் கமண்டலத்தில் கங்கை நீர் நிறைந்தது.
அப்போது மழை இல்லாமல் போகவே தேவலோகத்தின் தலைவனான இந்திரன், பெருமானிடம் முறையிட்டான். சிவபெருமான் விநாயகரிடம் காக்கை வடிவம் கொண்டு அகத்தியன் கமண்டல நீரை கவிழ்க்கும் படி கட்டளையிட்டார்.அதற்கு பணிந்து விநாயகர் வெள்ளை காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டல நீரை கவிழ்த்தார்.கமண்டல நீரே காவிரி நதியாக ஓடத் தொடங்கியது என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு கவிக்கப்பட்ட இடமே "கொடுமுடித்துறை" என்பர். இவ்விடம் காவிரி தெற்கு நோக்கி வந்து இங்கிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இவ்விடத்தில் காவிரியின் நடுவில் அகத்தியர் பாறை என வழங்கும் பாறையில் இந்த வரலாறை குறிக்கும் திரு உருவங்கள் இன்றளவும் இருக்கின்றன.
மேலும் திருச்சி ஜில்லாவிலும் கல்லணையில் அகத்தியர் கமண்டல நீரை விநாயகர காக்கை வடிவில் நீரை கவிழ்க்கும் சிற்பம் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அதனை இன்றும் காணலாம். இத்தகைய காரணத்தினால் இங்கு உள்ள விநாயகருக்கு "காவிரி கண்ட விநாயகர்" "என பெயர் வந்தது.
காவிரியும் தன் கலைகள் நிரம்பி பெருக்கெடுத்து சோழநாடு அடைந்து சோலைகளின் வழியே பாய்ந்து வளமுற செய்து முடிவில் காவேரிப்பூம்பட்டினம் கடலில் சங்கமம் ஆகிறது. அகத்தியர் விரும்பியபடியே சிவபெருமான் வடிவாம்பிகை அம்மையார் வலத்தில் விளங்க தமது திருமண கோலக் காட்சியை கொடுமுடியில் காட்டி அருளினார். கொடுமுடி கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்களுக்கு என்றும் அருள் பாலிக்கிறார் சிவபெருமான்.
இயன்றவர்கள் ஒரு முறையேனும் கொடுமுடி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
தவெகவை முடக்க முயற்சிக்கிறார்கள்... எங்களுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது... சிடிஆர் நிர்மல்
ICC ODI ranking: ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில்.. ரோஹித் சர்மா புதிய சாதனை!
வைரலானது.. ஜப்பானின் முதல் பெண் பிரதமரின் கைப்பை.. உள்ளூர் நிறுவனத்திற்கு கிராக்கி!
{{comments.comment}}