டெல்லி: "லேடி டான், மின்ஸ் மேடம், ரிவால்வர் ராணி".. இதெல்லாம் யார் தெரியுமா.. ஒரே ஆள்தான்.. இப்படி பல செல்லப் பெயர்கள் இருந்தாலும்.. அனுராதா செளத்ரி என்பதுதான் அவரோட ஒரிஜினல் பெயர்.. அவருக்கு இன்னிக்கு காலையில் கல்யாணம் ஆயிருச்சு பாஸ்!
ஒரே தொழிலில் இருப்பவர்கள் கல்யாணம் செய்து கொள்வது சகஜம்தானே.. அதேபோல நம்ம ரிவால்வர் ராணியும், தன்னைப் போலவே ஒரு டானாக வலம் வரும் சந்தீப் எனப்படும் காலா ஜத்தேரி என்ற கேங்ஸ்டரை கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.
டெல்லியில் உள்ள துவாரகா என்ற ஹோட்டலில் வைத்து இந்தக் கல்யாணம் இன்று காலையில் நடந்துள்ளது. இரு டான்களின் சங்கமம் என்பதால் பிரச்சினை ஏதும் வந்து விடாமல் இருக்க போதிய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஆக்சுவலி, நம்ம காலா ஜத்தேரியை திஹார் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். கல்யாணம் செய்வதற்காக அவருக்கு பரோல் கொடுத்து வெளியே கூட்டி வந்திருந்தனர்.
இந்த டான் கல்யாணத்திற்காக ஸ்வாட் சிறப்புப் படையினர், டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு, 3வது பட்டாலியன், 150 முதல் 200க்கும் மேற்பட்ட போலீஸ் படையினர் என ஏகப்பட்ட பேர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். இன்று கல்யாணத்தை முடித்த கையோடு, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள மணமகன் வீட்டுக்கு மணமக்கள் செல்லவுள்ளனர். அங்கு வைத்து மேலும் சில குடும்பச் சடங்குகள் செய்யப்படவுள்ளதாம்.
காலா ஜத்தேரி மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. மிகப் பெரிய கும்பலைச் சேர்த்துக் கொண்டு ஆள் கடத்தல், மிரட்டல், பணம் பறித்தல் என பல்வேறு வகையான கிரைம் செயல்பாடுகளில் ஈடுபட்டவர் ஜத்தேரி. கடந்த 2021ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரில் வைத்து ஜத்தேரியையும், அனுராதாவையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர். பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காலா ஜத்தேரி கும்பலைச் சேர்ந்தவர்தான் அனுராதா. இவர் மீதும் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல், அடிதடி என நிறைய கேஸ்கள் உள்ளன. இவர் தற்போது ஜாமீனில் வெளியேதான் இருக்கிறார். திருமண வைபவங்கள் முடிந்துதம் ஜத்தேரியை மீண்டும் திஹார் சிறையில் போலீஸார் அடைக்கவுள்ளனராம்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}