சென்னை: மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் டல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது பூர்வீக இல்லத்தில் வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை நெசப்பக்காம் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
முன்னதாக அவரது உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில் பொதுமக்கள், திரை பிரபலங்கள், டெல்லி கணேஷ் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணசித்திர நடிகராக வலம் வந்தவர் நடிகர் டெல்லி கணேஷ். 80 வயதான இவர் இதுவரை 400 க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கமல் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி படத்தில் இவரது நடிப்பு பல்வேறு ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தது. டெல்லி கணேஷ் ராமாபுரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் மகா கணேஷ். இந்த தம்பதிகளுக்கு பிச்சு என்ற மகனும், சாரதா என்ற மகளும் உள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு தனது குடும்பத்தாருடன் நன்றாக பேசிவிட்டு, தூங்க சென்ற டெல்லி கணேஷ் தூக்கத்திலேயே உயிரிழந்தார். இவரின் திடீர் மறைவு திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி கணேஷின் திடீர் மறைவிற்கு, முதல்வர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, தவெக தலைவர் விஜய், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பலர் தங்களின் இரங்கல்களை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி கணேஷின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் வைக்கப்பட்டது. அமைச்சர் மா. சுப்பிரமணியன், நடிகர்கள் செந்தில், ராதாரவி, சந்தான பாரதி, கார்த்தி, சிவக்குமார்,ரோபோ சங்கர், லிங்குசாமி, சத்யராஜ், வெற்றிமாறன், உள்ளிட்ட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
டெல்லி கணேஷ், தமிழ் சினிமாவில் காலடி வைக்கும் முன்பே இந்திய விமானப்படை அதிகாரியாக பணியாற்றியுள்ளார் என்பது நினைவிருக்கலாம். இதனால் இந்திய விமானப்படை வீரர்கள் டெல்லி கணேஷ் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர். அதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின் மற்றும் நிர்வாகிகள் நேரில் வந்து டெல்லி கணேஷ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் நெசப்பாக்கம் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காலை 10 மணி முதல் அவரது உடல் ராமாபுரம் இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நெசப்பாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் டெல்லி கணேஷ் குடும்பத்தினர், பொதுமக்கள், திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!
கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!
என்னுள் எழுந்த (தீ)!
144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!
ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!
{{comments.comment}}