சென்னை: பிக் பாஸ் புகழ் லாஸ்லியா கவர்ச்சியான புகைப்படங்களை தனது பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதற்கு வரவேற்பும், பாராட்டும் அள்ளுகிறது.
இலங்கைத் தமிழச்சியான லாஸ்லியா மரியநேசன் 1996 மார்ச் 23ம் தேதி கிளிநொச்சியில் பிறந்தார். திரிகோணமலையில் படித்தவர்.. பிறகு டிவிக்குள் நுழைந்த அவர் அங்குள்ள சக்தி டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். பிறகு மாடலிங் துறையில் தனது கவனத்தை செலுத்தி வந்த நிலையில்,
பிக் பாஸ் 3ல் பங்கேற்க லாஸ்லியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறந்த போட்டியாளராகவும் விளங்கினார். அனைவரிடமும் கலகலப்பாகவும், அன்பாகவும் இருந்த லாஸ்லியா ஒரு கட்டத்தில் மற்றொரு போட்டியாளரான கவின் உடன் காதல் வயப்பட்டார்.
பிக் பாஸ் சீசன் 3 முடியும் வரை லாட்லியா கவின் காதல் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தது. இவர்கள் வெளிப்படையாகவே ஒருவர் மீது ஒருவர் அன்பைப் பொழிந்தது சலசலப்பையும் ஏற்படுத்தியது. ஆனால் பிக் பாஸ் சீசன் 3 முடிந்த பின்னர் லாஸ்லியா ஒரு பேட்டியில் எங்களின் இருவரின் கருத்துகளும் ஒத்துப் போகவில்லை என தெரிவித்திருந்தார். அத்தோடு காதலும் காலியாகி விட்டது.
அதன் பின்னர் சினிமாவில் நுழைந்தார் லாஸ்லியா. நட்பு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்தார். ஆனாலும் அதன் பின்னர் அவருக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் விடாமல் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார் லாஸ்லியா.
தனது twitter மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இவரது இன்ஸ்டாகிராமிலும் ஏகப்பட்ட போட்டோக்கள் குவிந்து கிடக்கின்றன.
இதில் இவருக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபேன் பாலோவர்ஸ் உள்ளனர். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
வித்தியாசமான போஸ்களில் உட்கார்ந்தபடி அவர் கொடுத்திருக்கும் விதம் விதமான புகைப்படங்கள் ரசிகர்களை குளிர்விப்பதாக உள்ளது. இவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}