- மஞ்சுளாதேவி
சென்னை: லியோ படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியானது.. படு வேகமாக விஜய் ரசிகர்களால் இது வைரலாக்கப்பட்டு வருகிறது. பாடல் படு அதிரடியாக, விஜய் ரசிகர்களுக்கான விருந்தாக அமைந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் லியோ. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், பாசில், மனோபாலா, மன்சூர் அலிகான் போன்ற முக்கிய திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர். அக்டோபர் 19ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் போஸ்டர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தது.

விஜய்யின் குரலில் லியோ படத்தின் முதல் பாடல் "நான் ரெடி தான் வரவா" ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது.விஜய் பிறந்தநாள் அன்று முதல் பாடல் வெளியிடப்பட்டதால் விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இந்த நிலையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி வரும் 30 ஆம்தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. இதனால் ரசிகர்கள் சந்தோஷ மழையில் நனைந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக 7 ஸ்டுடியோ நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தது. இதற்குப் பின்னால் அரசியல் அழுத்தம் எதுவும் இல்லை என்றும் அது பொடி வைத்திருந்தது.
இந்த செய்தி கேட்டு விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்திலும் சோகத்திலும் உள்ளனர். இப்படி டல்லாகிக் கிடக்கும் ரசிகர்களை குஷிப்படுத்த லியோவின் அடுத்தடுத்த அப்டேட் வெளியிடப்படும் என படக் குழுவினர் அறிவித்தனர். அந்த வகையில் இன்று 2வது சிங்கிளை வெளியிட்டது லியோ படக் குழு. "படாஸ்" என்ற அந்தப் பாடலை விஷ்ணு எடவன் எழுத, அனிருத் பாடியுள்ளார். பாட்டு படு அதிரடியாக உள்ளது.

விஜய் ரசிகர்களுக்கான ஆன்தம் போல பாடல் உள்ளது. செதறணும் பயந்து, ஒரசாம ஓடிடு.. என்று பட்டையைக் கிளப்பும் அனல் வரிகள் பாடலில் இடம் பெற்றுள்ளன. இளைய தளபதியின் படத்தில் உள்ள பாடல்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துள்ளிக்குதித்து ரசிக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் இந்தப் பாடலும் விஜய் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்துள்ளது. முதல் பாடலுக்கு சற்றும் குறைவு இல்லாமல் இந்தப் பாடலும் அதிரிபுதிரியாக உள்ளது.
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
{{comments.comment}}