Leo: ஆத்தாடி திரிஷாவுக்கு இவ்வளவு சம்பளமா.. அப்ப லோகேஷ் கனகராஜுக்கு?

Oct 20, 2023,04:07 PM IST

- மீனா


சென்னை: மிகப் பிரமாண்டமான முறையில் வெளியாகி வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் லியோ படத்தில் நடித்ததற்காக ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட சம்பளம்தான் இப்போது ஹாட்டாக பேசப்படுகிறது.


தளபதி விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களிலும் ஆறு நாட்களும்  ஹவுஸ் புல் ஆகியிருப்பதால் இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றதாக கருதப்படுகிறது. 




இப்படத்தில்  விஜய் ,திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. லியோ திரைப்படம் கிட்டத்தட்ட 300 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை பல்வேறு  திரை பிரபலங்கள் இணைந்துள்ளனர். 


லியோ திரைப்படம் நேற்று வெளியானதிலிருந்து இப்படத்தை விஜய் ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். இந்நிலையில் லியோ படத்தில் நடித்துள்ள நடிகர்களின் சம்பள விபரம் கசிந்துள்ளது. இது முழுக்க சரியா என்று தெரியாது.. ஒரு டாக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் குறையவும் இருக்கலாம்.. அல்லது கூடுதலாகவும் இருக்கலாம்.. எல்லாம் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கே வெளிச்சம். சரிவாங்க என்ன மேட்டர் அப்படிங்கிறதைப் பார்ப்போம்.


விஜய் சம்பளம்




லியோ படத்தில் விஜய்க்கு 120 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்ட நிலையில் மற்ற நடிகர்களின் சம்பளங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு லியோ படத்தின் மூலம் விஜய்யும், திரிஷாவும் இணைந்து நடித்துள்ளார்கள். இந்நிலையில் லியோ படத்திற்காக த்ரிஷா 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. நடிகர்களின் சம்பளத்தோடு ஒப்பிடும்போது இது குறைவுதான் .ஆனால்  அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் த்ரிஷா தான் முதன்மையானவராக இருக்கிறார்.


வில்லன் சஞ்சய் தத்




லியோ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் முதல் அடியெடுத்து  வைத்துள்ளார் நடிகர் சஞ்சய் தத். படத்தின் மெயின் வில்லனாக நடித்துள்ள சஞ்சய் தத் பாலிவுட்டில் 270 க்கு மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்  . இந்நிலையில் தமிழில் அறிமுகமான முதல்  படமான  லியோவில் வில்லனாக நடித் ததற்கு 8 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல் இன்னொரு வில்லனாக நடித்துள்ள ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. 




கெளதம் மேன் ஜோடியாக நடித்துள்ள பிரியா ஆனந்த் லியோ படத்தில் நடித்ததற்காக 50 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம். இதனைத் தொடர்ந்து கௌதம் மேனன், மன்சூர் அலிகான் , சாண்டி மாஸ்டர், மிஸ்கின் உள்ளிட்டவர்களுக்கு 30 லட்சம் முதல் 50 லட்சங்கள் வரை தோராயமாக சம்பளங்கள்  கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. 


லோகேஷ் கனகராஜ் சம்பளம்




இப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் சம்பள விவரம் தெரியவில்லை. ஆனால் இவ்வளவு பெரிய நடிகர் பட்டாளத்தை வைத்து படத்தை இயக்கியதற்கு அவருக்கு ஒரு கணிசமான தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. எப்படியும் டபுள் டிஜிட்டில்தான் சம்பளம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மாஸ்டர் படத்துக்குப் பிறகு அவரது சம்பளம் வெகுவாக ஏறி விட்டதாக அப்போதே பேச்சு அடிபட்டது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்